பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல விஜய் டிவி நடிகர்... அவரே வெளியிட்ட சூசகமான பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு விஜய் டிவி  பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது.

ஆம் ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் அசீம் நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அசீம்  பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால், எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ போகிறது என்பதை காண அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "யாரும் மாஸ்டர் இல்லை; யாரும் ராஜா இல்லை..படைத்தவனே நிசப்தமாய் இருக்கும்போது, படைப்புகளின் சத்தம் ஏன் " என்று கூறியுள்ளார். இதை பார்த்த பலரும் இது பிக்பாஸ் நிகழ்ச்சி செல்வதற்கு முன்பு நீங்கள் கொடுக்கும் குறிப்பா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags : Azeem, Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Azeem terrific post before entering biggbossபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் நடிகர்

People looking for online information on Azeem, Biggboss will find this news story useful.