தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
Also Read | "அசிம் Finale ஜெயிக்க தகுதி இல்ல".. கமல்ஹாசன் முன் லிஸ்ட் போட்டு அடுக்கிய விக்ரமன்!!.. Bigg Boss
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது. இந்த நிலையில், வார இறுதியில் தோன்றி இருந்த கமல் ஹாசன், Finaleவில் வெற்றி பெற தகுதி இல்லாத ஒருவரின் பெயரை குறிப்பிடும் படி அனைத்து போட்டியாளர்களிடமும் கேட்டுக் கொண்டார். இதற்கு மத்தியில் ரச்சிதாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
அப்போது ஷிவின், ரச்சிதா, விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் அசிம் பெயரை தெரிவித்திருந்தனர். மேலும் அசிமை அவர்கள் அப்படி தேர்வு செய்ததற்காக நிறைய காரணங்களையும் கூறி இருந்தனர். அனைத்து போட்டியாளர்களிடமும் அசிம் சண்டை போடுவதாகவும், மேலும் ஸாரி கூறியும், காஃபி, டீ போட்டுக் கொடுத்து அவர்களுடன் மீண்டும் நல்ல முறையில் பழகினாலும் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் சண்டை போடுவார் என்றும் காரணம் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தன் மீது போட்டியாளர்கள் வைத்த கருத்து தொடர்பாக அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையிலும் விளக்கம் கொடுக்கிறார் அசிம். தான் ஸாரி கேட்பதும், டீ போட்டு கொடுப்பதும் தவறான எண்ணத்தில் கிடையாது என்றும், என் மனதார தான் அப்படி எல்லாம் செய்தேன் என்றும் விளக்கம் கொடுக்கிறார். மேலும் நான் போலியாக தான் அப்படி எல்லாம் செய்தேன் என நீங்கள் நினைத்தால் என்னுடன் இனி பேச வேண்டாம் என்றும் அசிம் தெரிவிக்கிறார். அசிம் பேசிய பிறகு, அசிம் ஏன் டைட்டில் வெற்றி பெறக் கூடாது என நினைத்தற்கான காரணங்களையும் அசிமிடம் முன் வைக்கின்றனர் சக போட்டியாளர்கள்.
இதற்கடுத்து, விக்ரமன் மற்றும் கதிரவன் உள்ளிட்டோர் குறித்தும் சில கருத்துக்களை அசிம் தெரிவிக்கிறார். தொடர்ந்து, பலரும் அசிமை தேற்றியும் சில கருத்துக்களை குறிப்பிட்டிருந்தனர். இப்படி சீரியஸாக போட்டியாளர்கள் அமர்ந்து பேசிய சமயத்தில் அமுதவாணன் செய்த விஷயம் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
அசிம் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டிருக்க திடீரென அமுதவாணன் தூங்கியதாக தெரிகிறது. அப்போது, "மாம்ஸ் தூங்கிட்டீங்களா?" என அமுதவாணனை நோக்கி அசிம் கேட்க, பட்டென எழுந்த அவர், தலைவலி இருந்ததால் தூங்கி விட்டேன் என கூறி இருந்தார். பரவாயில்ல தூங்குங்க என அசிம் கூற, எழுந்து உட்கார்ந்த அவர் அசிம் மற்றும் சக போட்டியாளர்கள் பேச்சையும் கேட்க ஆரம்பித்திருந்தார்.
Also Read | "அதுக்கு எல்லாம் பயப்படுற ஆளு நான் இல்ல".. அசிம் சொன்னதும் விக்ரமன் கொடுத்த பதிலடி!