"அவங்க பிக் பாஸ் வந்து என்ன பண்ணாங்க?".. SEASON 4 போட்டியாளர்கள் பத்தி அசீம் பரபரப்பு கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.

மேலும், பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆதரவினை அளித்து வருவதுடன் அவர்கள் பற்றிய கருத்தையும் தெரிவித்து வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விஷயம், தினந்தோறும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதே போல, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கூட போட்டியாளர்கள் இடையே நடைபெற்று வருவதும் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெறும். இப்படி ஏகப்பட்ட பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆயிஷா வெளியேறி இருந்தார். இதற்கடுத்து மற்ற போட்டியாளர்கள் புதிய டாஸ்க்கில் தங்களின் திறனை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

அப்படி ஒரு சூழலில், முந்தைய சீசன் போட்டியாளர்கள் குறித்து அசீம் பேசிய விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. பிக்பாஸ் சீசன் ஆரம்பித்து இத்தனை நாட்களில், அசீம் குறித்த விஷயங்கள் நிறைய வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இதற்கு காரணம், தனது மனதில் பட்ட விஷயங்களை எந்த ஒளிவு இல்லாமல் நேரடியாக பேசுகிறார் என்பது தான். அதே போல, சில போட்டியாளர்களுடன் அடிதடி நிலை வரை அசீம் சென்றிருந்ததும் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் தான், முந்தைய சீசன் போட்டியாளர்கள் குறித்தும் அசீம் பேசி உள்ளார். முந்தைய சீசன் போட்டியாளர்கள் குறித்து மைனா நந்தினி, மணிகண்டா பேசிக் கொண்டிருக்க, அப்போது பேசிய அசீம், "ஆஜித் எல்லாம் ஒண்ணுமே பண்ணல மச்சான். கேப்ரியா ஒண்ணுமே பண்ணல. நீ ஆஜித் ஏதாவது பண்ணி இருக்கான்னு சொல்லு. ரியோ கூட இங்க வந்து பெருசா எதுவுமே பண்ணல. நிஷா ஏன் வந்தாங்கன்னு அவங்களுக்கும் தெரியல. பாத்தவங்களுக்கு புரியல. ஜித்தன் ரமேஷ் என்ன பண்ணாரு?" என மணிகண்டாவிடம் தெரிவித்தார் அசீம்.

தொடர்புடைய இணைப்புகள்

Azeem speak about bigg boss old contestants to housemates

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil will find this news story useful.