பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
Also Read | துணிவு படத்தில் பட்டிமன்றம் மோகன சுந்தரம்.. வெளியான கேரக்டர் லுக் போஸ்டர்!
இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதற்கு மத்தியில், இரவு நேரம் அசிம் வழுக்கி விழ இருந்தது தொடர்பான விஷயமும் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவில் திடீரென பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருக்க, பாத்ரூம் அருகே சத்தம் கேட்டதாக தெரிகிறது. டக்கென எழுந்து கதிரவன் பதற்றத்துடன் அங்கே சென்று என்னவென அசிம் பாத்ரூமில் கால் வழுக்கியதாகவும் ஆனால் கீழே விழவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
இதன் பின்னர் பேசும் கதிரவன், சத்தம் கேட்டதால் பதறியதாகவும் கூற, அது டிரம் சவுண்டு தான் என்றும் வேறு ஏதும் நடக்கவில்லை என்றும் அசிம் விளக்குகிறார். திடீரென இரவு நேரத்தில் அசிம் பாத்ரூமில் வழுக்கி விழ இருந்த சூழலில், கதிரவன் ஓடி வந்த விஷயம் சற்று பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
Also Read | விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'.. KGF-ல் ஷூட்டிங் குறித்து பா. ரஞ்சித் கொடுத்த செம்ம அப்டேட்!