“நான் பெருமைக்கு பன்னி மேய்க்கல.. என்ன வெச்சு செஞ்சாங்க!” - அசீம் பரபரப்பு பேச்சு! BIGG BOSS 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "நல்லா விளையாடுறீங்க‌.. நீங்க போக மாட்டீங்க".. பிரபல போட்டியாளரிடம் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ் .!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக மைனாவும் பங்கேற்றார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா ஆகிய 2 படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.  இதனிடையே பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் ரச்சிதா, கதிரவன், ஏடிகே, அமுதவாணன் என பல போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் பிக்பாஸ் வீடு நெகிழ்ச்சி கோலம் கொண்டது.

முன்னதாக மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். இந்நிலையில் மைனா, கதிரவன் மற்றும் மணிகண்டாவிடம் ஒரு வேளையில் அமர்ந்து பேசும் அசீம் தன்னை குறித்து பேசியுள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

அதில்,  “மச்சான் உண்மையிலேயே சொல்ல போனா, நான் எனக்குனு பெருமைக்கு பன்னி மேய்க்கவே இல்ல. இந்த சீசன்ல அதிகமா கமல்சார்ட்ட பூஸ்ட் வாங்குனது நான்தான், அதிகமா எபிசோட்ல வெச்சு செஞ்சதும் என்னைதான்” என பேசியுள்ளார். அசீமின் இந்த அனலைஸிஸ் பேச்சு வைரலாகி வருகிறது.

Also Read | CHRISTMAS & NEW YEAR கொண்டாட நடிகை மீனா எந்த நாட்டுக்கு போயிருக்காங்கனு பாருங்க! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Azeem self about his play in bigg boss 6 tamil பிக்பாஸ் அசீம்

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6 will find this news story useful.