"எனக்கு இது வேணாம்".. TASK-ல் ADK கொடுத்த விருது.. தூக்கி வீசிய அசிம்!!.. BIGG BOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

Also Read | "பேங்க் உள்ள அஜித் டான்ஸ்.. தியேட்டர்ல அதை பார்க்கனும்".. 'துணிவு' குறித்து மஞ்சு வாரியர் EXCLUSIVE!

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.

மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்த TTF டாஸ்க்குகளுக்கு இடையே ஏராளமான் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இதற்கிடையே, தற்போது BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. மற்ற சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் பலரும் பல விதமான விருதுகளை தங்களுக்கு தோன்றும் நபர்களுக்கு கொடுத்து கொண்டிருக்க, "Opening எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா உங்க பினிஷிங் சரி இல்லையே பா" என்ற விருதினை அசிமுக்கு ADK கொடுக்கிறார். இதனை மேடைக்கு வந்து வாங்கும் அசிம், கடைசியில் அதனை தூக்கி வீசி, "இது எனக்கானது கிடையாது. நான் இத எடுத்துக்க போறதும் இல்ல" என சற்று ஆவேசமாக பேசி விட்டு கடந்து செல்வதாகவும் தெரிகிறது.

Also Read | "கொஞ்சம் அவகாசம் கொடுங்க".. தனது ரசிகர்களுக்கு திடீர் அறிக்கை விட்ட KGF நடிகர் யஷ்!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem refuse adk award in bigg boss task section

People looking for online information on ADK, Azeem, Azeem refuse adk award, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Myna Nandhini will find this news story useful.