விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் மூலம் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறி இருந்தது.
Also Read | அசீம்க்கு சிறை.. உள்ள போறப்போ பேசுன பேச்சு.. ஒரே வார்த்தையில் சோலிய முடிச்ச மைனா 😅
ஒரே ஒரு டாஸ்க்கின் பெயரில், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வந்தது. அதிலும் குறிப்பாக ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்டதில் இருந்து அவரை தள்ளி விட்டது யார் என்பது பற்றி பெரிய விவாதமே பிக்பாஸ் வீட்டில் உருவாகி இருந்தது.
அசீம் உள்ளிட்ட சிலர், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டு அதன் மூலம் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், விக்ரமன் உள்ளிட்ட சிலர், தனலட்சுமி செய்திருப்பார் என எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என்றும் எதிர் கேள்விகளை முன் வைத்திருந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து பல்வேறு போட்டியாளர்களும் கருத்தினையும் விவாதத்தையும் தெரிவித்து கொண்டிருக்க, பிக்பாஸ் வீடே அல்லோலப்பட்டு கிடந்தது. வார இறுதியில் முறையான ஆவணங்களுடன் கமல்ஹாசன் வரும் போது தான், ஷெரினாவை தள்ளி விட்டது யார் என்பது குறித்து இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். தற்போது பொம்மை டாஸ்க்கும் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் Worst Performer யார் என்பதையும் தெரிவிக்கின்றனர். இறுதியில், ஷிவின் மற்றும் அசீம் Worst Performer மற்றும் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி சிறை செல்லவும் பிக்பாஸ் கூறுகிறார்.
பொம்மை டாஸ்க் முடிவடைந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாகவும் போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இதனிடையே, பொம்மை டாஸ்க்கிற்கு பிறகு, போட்டியாளரை நாமினேட் செய்யும் வேளையில் தனலட்சுமி குறித்து அசீம் பேசி இருந்த விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் Worst Performer யார் என்பது பற்றி போட்டியாளர்களை நாமினேட் செய்து வந்தது தெரிகிறது.
அந்த சமயத்தில் பேசிய அசீம், "இதுல எனக்கு 2 பேர் இருக்கு பிக்பாஸ். ஒண்ணு ஷிவின், இன்னொன்னு தனலட்சுமி. இதுல Worst of Worst அப்படி பாத்தீங்கன்னா நான் தனலட்சுமியை சொல்லுவேன். ஏன்னா, Defend செய்வது அவங்க வேலையா இருந்தா கூட அதே வேளையில் அவங்களும் ஒரு பெண் என்ற அடிப்படையில் இன்னொரு பெண்ணை Manhandling செய்வது போல Woman Handling பண்ணி இருக்க கூடாது. அவங்க தள்ளி விட்டாங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கல.
அதுக்கு அப்புறம் உடம்பு சரியில்லைன்னு வெளிய வந்து சொல்லும் போது கூட ஒரு Humanity உணர்வு இல்லாமல் ரொம்ப Attitude ஆக இருந்தது போல தோன்றியது. அதனால் Worst Performer என தனலட்சுமியை சொல்கிறேன்" என அசீம் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "அமுதவாணன் ஜோக்கரா சுத்திட்டு இருந்தாருங்கோ".. ADK பாடுன பாட்டு.. Chorus போட்ட ஹவுஸ்மேட்ஸ்