அசீம்-க்காக சர்ப்ரைஸாக வந்த GUEST.. அவரை வச்சே FUN பண்ணிட்டாங்க😅..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | தனலட்சுமி எலிமினேட் ஆனதால் வருத்தப்பட்ட பிரபல நடிகை.. மைனா சொன்ன தகவல்.. அசீம் போட்ட கமெண்ட்..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகைபுரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில், புதிய அன்ஸீன் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில், அசீமின் குடும்பத்தினர் அவரைக் காண பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். அவர்களை கண்டதும் அனைவரும் எழுந்து செல்ல திடீரென அசீம் மட்டும் Freeze-ல் இருக்குமாறு சொல்கிறார் பிக்பாஸ். இதனால் புன்னகையுடன் அவர் மீண்டும் தனது இருக்கையில் அமர்கிறார். பின்னர் கிச்சன் பகுதியில் அசீம் மீது அவரது குடும்பத்தினர் ஸ்னோ அடிக்க, சக போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக ஆராவாரம் செய்கின்றனர்.

அப்போது, Freeze மோடில் இருந்து அசீமை ரிலீஸ் செய்கிறார் பிக்பாஸ். அதன் பின்னர் கார்டன் பகுதியில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க திடீரென அசீமை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிடுகின்றனர் அவரது விருந்தினர். இதனை பார்த்து, அனைவரும் புன்னகைக்கின்றனர். இந்த வீடியோவால் இன்றைய எபிசோட் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Also Read | ஷிவினை வச்சு ADK ஸ்பாட்ல பாடிய பாடல்.. டக்குன்னு ஒன்னு கூடிய ஹவுஸ்மேட்ஸ்.. இன்றைய பிக்பாசில்..!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem met with his family members in BiggBoss House

People looking for online information on Azeem, Azeem met with his family members, Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv will find this news story useful.