"ADK அப்டியே மாத்தி பேசிட்டாரு". குழம்பிய அசீம்!!.. கமல் சொன்ன பதில்!! WEEKEND-ல செம சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த டாஸ்க், ஏலியன்ஸ் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கிற்கு அப்படியே நேர் எதிராக அமைந்திருந்தது. சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும், நடிப்பும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.

முந்தைய வாரங்களை போல சண்டை அதிகம் இல்லாமல், சற்று கலகலப்பாக தான் இந்த வார டாஸ்க்கும் சென்றிருந்தது. டாஸ்க் முடிவுக்கு வந்த நிலையில், வார இறுதி எபிசோடில் கமல்ஹாசனும் தோன்றி இருந்தார். இந்த வாரம் நடந்த டாஸ்க் குறித்தும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விஷயங்களை உரையாடி இருந்தார் கமல்ஹாசன். 

அப்படி ஒரு சூழலில், இந்த வாரத்தின் முதல் எலிமினேஷனில் ராம் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அவர் வெளியேறியதால் பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவின் கண்ணீரும் வடித்திருந்தார். தொடர்ந்து, இன்றைய எபிசோடிலும் எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ADK குறித்து வெளிப்படையாக கமல்ஹாசன் முன்னிலையில் அசீம் பேசிய விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சைக்கிள் ஜாக்சன் என்ற கதாபாத்திரத்தில் இந்த வார டாஸ்க்கில் மிகவும் அற்புதமாக நடனமாடி அசத்தி இருந்தார் கதிரவன். ஆனால், அவர் டான்ஸுக்கு போட்டியாளர்கள் சரியாக பணம் கொடுக்கவில்லை என்பது பற்றி அசீம் பேசி இருந்தார்.

இது பற்றி கமல்ஹாசன் முன்னிலையில் பேசிய அசீம், "எனக்கு ஒண்ணு புரியல சார், இந்த இடத்துல சைக்கிள் ஜாக்சன் நல்லா பண்ணான்னு சொல்றவங்க, ஏன் அந்த அவார்ட் ஃபங்ஷன் நடந்தப்போ சொல்லலங்குறது ஏன்னு தெரியல" என கூறுகிறார். அப்போது பேசும் கமல்ஹாசன், " இந்த விசாரணை அதுக்காக தான்" என்கிறார்.

தொடர்ந்து பேசும் அசீம், "ADK அன்னைக்கி சொன்னது இப்போ அப்படியே வேறயா இருக்கு. அன்னைக்கு எல்லார் முன்னாடியும் சைக்கிள் ஜாக்சன் கதிர் டான்ஸ் பத்தி, 'ஏன் இவன் இவ்வளவு Irritate பண்றான்' அப்படின்னு சொன்னாரு. அந்த அவார்ட் ஃபங்ஷன்ல கூட யாரு Worstன்னு கேட்ட போது ADK முதல் ஆளா கதிரவனை தான் சொன்னாரு. அப்படி சொன்னவரு இன்னைக்கு அப்படியே மாத்தி பெஸ்ட் பெர்ஃபார்மர் சைக்கிள் ஜாக்சன்னு சொன்னது எனக்கே புரியல சார். என்னடா இந்த மனுஷன் தானே அன்னைக்கே அப்படி சொன்னாரு, இன்னைக்கு ரிவர்ஸ்ல இருக்காருன்னு நானும் யோசிச்சேன். அப்போ அப்படி சொல்லிட்டு இன்னைக்கு ஏன் அந்த முரண் இருக்குன்னு சத்தியமா எனக்கு தெரியல சார்" என அசீம் கூறினார்.

இதன் பின்னர் கமல்ஹாசனிடம், "நான் ஒரு வார்த்தை பேசலாமா சார்?" என கேட்கிறார் ADK. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், "அன்றைக்கு வாக்களித்த நீங்கள் தான் இப்போது மாற்றி பேசுகிறீர்கள். அதாவது அங்கே திறமையை விட ஃபேவரைட்டிசமும் ஃப்ரண்ட்ஷிப்பும் முன்னிலைபடுத்திக்கிட்டதா தான் எனக்கு தோணுது. ஆக திறமைகள் பின்னால் போய் பரிசுகள் வழங்கப்பட்டது" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Azeem kamalhaasan and adk about kathiravan dance in bigg boss

People looking for online information on ADK, Azeem, Bigg boss 6 tamil, Kamal Haasan will find this news story useful.