குழப்பத்துடன் CONFESSION ரூம் போன ரச்சிதா.. அப்படியே இமிடேட் செய்து அசத்திய அசிம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

Also Read | நோட் பண்ணீங்களா? வாரிசு ட்ரைலரில் வரும் விஜய் மற்றும் சரத்குமார் படத்தோட டைட்டில்.! Varisu Trailer

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

ஒரு பக்கம் டாஸ்க் என வந்து விட்டால் போட்டியாளர்கள் சற்று பரபரப்பாக ஆவேசத்துடன் சண்டை போட்டு இயங்கினாலும் மற்ற நேரங்களில் பிக் பாஸ் வீட்டில் நிறைய கலகலப்பான விஷயங்களும் அரங்கேறும். அந்த வகையில், ரச்சிதாவை அப்படியே அசிம் இமிடேட் செய்வது தொடர்பான விஷயம், பிக் பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரச்சிதாவை திடீரென Confession ரூமுக்கு வரும் படி பிக் பாஸ் அழைக்கிறார். இதனைக் கேட்டதும் சற்று குழப்பத்துடன் இருக்கும் ரச்சிதா, "Me?" என்றும் கேட்க, ஆமாம் என்றும் பிக் பாஸ் குறிப்பிடுகிறார். எதற்காக இருக்கும் என்ற படி, ரச்சிதா கேள்வியுடன் உள்ளே செல்வது போல தெரிகிறது. அந்த சமயத்தில், அவர் உள்ளே எப்படி எல்லாம் பேசுவார் என முதலில் மைனா நந்தினி ஜாலியாக சில விஷயங்களை செய்து காட்டுகிறார்.

அப்போது அனைவரையும் அழைத்த அசிம், Confession ரூமுக்குள் செல்வதற்கு முன்பு "Me?" என ரச்சிதா கேட்கும் போது அவரிடம் முக பாவனைகள் எப்படி இருந்தது என்பதை அவர் அப்படியே பவ்யமாக செய்து காட்டுகிறார். இதனை பார்த்ததும் மைனா, ADK, அமுதவாணன், ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் சிரிக்கவும் தொடங்கி விட்டனர்.

Also Read | "தப்பா இருக்கு அசிம் நீங்க பேசுறது".. "அடுத்த கேம் உங்க ரெண்டு பேரையும்".. Task-ல் வெடித்த மோதல்!!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem imitates rachitha in front of housemates bigg boss

People looking for online information on ADK, Amudhavanan, Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Rachitha, Shivin will find this news story useful.