பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் அசீம் தனது அனுபவம் குறித்து நமது சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | “Marriage ஆன பின்பு இது ஒன்னுதான் difference” - நடிகை ஹன்சிகா ஜாலி பதில்.! வீடியோ
தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6-ல் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எப்போதும் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைவது வழக்கம். ஆனால் கடந்த சீசனில் முதன்முறையாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைந்தனர். இந்த மூவரில் வெற்றி பெறப் போவது யார் என ரசிகர்களிடையே சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வந்த வேளையில் அசீம் தான் வெற்றியாளர் என அறிவித்தார் கமல்ஹாசன். இது அவரது ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
Image Credit : Vijay Television
இந்நிலையில் நமது சேனலுக்கு அசீம் சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அப்போது தனது பிக் பாஸ் அனுபவங்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டில் உள்ளே நடந்த சம்பவங்கள் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். இந்த சூழ்நிலையில் அறம் வெல்லும் என மேடையில் விக்ரமன் சொன்னதற்கும் விக்ரம் அருகில் கமல் நின்றது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அசீம் "இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் தான் போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கு தகுதி பெற்றனர். நான் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதும் மக்களின் ஆதரவினால் மட்டுமே. அதுதான் உண்மை. இந்த உண்மைதான் அறம். அப்படி என்றால் அறம் ஜெயித்து விட்டது தானே நான் ஜெயித்து விட்டேன்" என்றார்.
தொடர்ந்து விக்ரமனுக்கும் தனக்கும் ஏற்பட்ட வாக்குவாதங்கள் குறித்து பேசிய அசீம்," எனக்கும் நண்பர் விக்ரமனுக்கும் கருத்து ரீதியாக எந்தவித முரண்பாடுகளும் கிடையாது. எங்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டை என்பது பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த டாஸ்க் பற்றியும் அப்போது வாக்குவாதங்களின் போது வெளிப்படும் வார்த்தைகளில் இருந்துமே. ஆனால் நான் குடுவை டாஸ்கின் போதே எனக்கு விக்ரமனையும் கதிரையும் மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டு இருந்தேன். அது தவிர வெளி உலகத்தில் எங்களுக்கிடையேயான சிந்தனையில் எனக்கும் விக்ரமனுக்கும் எந்தவித வாக்குவாதமோ சண்டைகளோ ஏதும் கிடையாது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் விக்ரமனுக்கு தான் சில முறை போன் செய்ததாகவும் அவரை அப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர் பிசியாக இருப்பதை உணர முடிகிறது என்றும் தனக்கும் அப்படியான சூழ்நிலையே இருந்ததாகவும் அசீம் தெரிவித்திருந்தார்.
Also Read | THALAPATHY 67: இந்தா வந்துருச்சுல.. புதிய போஸ்டர் & அறிக்கையுடன் வெளியான தளபதி 67 படத்தின் அறிவிப்பு..!