ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read | AR ரஹ்மான், மகன் அமீனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் Pic!!
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.
மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் தற்போது முடிவுக்கு எட்டி உள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த TTF டாஸ்க்குகளுக்கு இடையே ஏராளமான விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.
இதற்கிடையே, BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.
இதனிடையே, தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கேமரா முன்பு அசிம் பேசிய விஷயம், பலரையும் மனம் உருக வைத்துள்ளது.
தனது மகன் ரயான் குறித்து நிறைய விஷயங்களை மனம் உருக பிக் பாஸ் வீட்டில் பேசி உள்ளார் அசிம். அப்படி இருக்கையில், சமீபத்தில் மகனின் பிறந்த நாள் என்றும் தெரிகிறது. இதனை முன்னிட்டு கேமரா முன்பு பேசும் அசிம், "இன்னைக்கு என் பையன் ரயானுக்கு பிறந்தநாள். ஹாப்பி பர்த்டே ரயான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்பவும் எல்லா வருஷமும் உன்ன பார்ப்பேன், உன் கூட இருப்பேன். இந்த வருஷம் உன் கூட இருக்க முடியல. Finale முடிச்சிட்டு, டைட்டில் வின் பண்ணிட்டு உன்னை வந்து பார்க்குறேன். லவ் யூ பேபி. ஹாப்பி பர்த்டே" என கூறியபடி கண் கலங்கும் அசிம், அங்கிருந்து கடந்து செல்கிறார்.
Also Read | அட, Bigg Boss-ஐ தொடந்து பிரபல சமையல் நிகழ்ச்சியில் ஜிபி முத்து.. அட்டகாசமான ட்ரெய்லர்!