"நான் கமல் சாரை தப்பா பேசுனேனா?".. திடீரென கிளம்பிய குற்றச்சாட்டு.. அசிமின் பதிலடி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுமார் 106 நாட்கள் மிகவும் அசத்தலாக நடந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடந்து முடிந்திருந்தது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த சூழலில் அனைவருக்குமே ஏராளமான ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, ஃபினாலேவிற்கு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

பிக் பாஸ் முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து போட்டியாளர்கள் பற்றிய பேச்சு இணையத்தில் பரவலாகவே இருந்து வருகிறது. அதிலும் டைட்டில் வின்னரான அசிம், அவ்வப்போது தன்னை சுற்றி வரும் விமர்சனங்கள் குறித்த கருத்தை தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வந்த வண்ணம் உள்ளார். இந்த நிலையில் சமீபத்திலும் தன்னை பற்றிய விமர்சனம் குறித்த விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசிம் பகிர்ந்துள்ளார்.

"சமீபத்தில் ஒரு இன்டர்வியூ கொடுத்திருந்தேன். அதுல வர வீடியோல நான் பேசுனத வச்சுட்டு கமல் சாரை நான் பேசுறது மாதிரி தேவையில்லாம நமக்கு ரொம்ப பிடிச்ச Haters இருப்பாங்கல்ல அவங்க வந்து டிரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. கமல் சார் சொன்ன விஷயம் வந்து முழுக்க முழுக்க என்னோட நல்லதுக்காக தான். என் பையன் இந்த ஷோவை பார்த்துட்டு இருப்பான். அதனால நீங்க கவனமாக விளையாடணும் அப்படின்னு அவர் எனக்கு சொன்னது, என் நல்லதுக்காக சொன்னது.



Image Credit : Vijay Television

அந்த விஷயத்தை நீங்க என்னோட Lovable Haters என்ன பண்றீங்க, நான் ஆடியன்ஸ்க்கு சொன்ன பதிலை கமல் சாருக்கு சொன்னதா தவறா சித்தரிச்சு போட்டுட்டு இருக்கீங்க. உங்களுக்கு இன்னொருத்தன் மேல இருக்கிற அன்பு காட்டுறதுக்காக உங்க டைமை யூஸ் பண்ணுங்க. வெறுப்பை காட்டுவதற்காக யூஸ் பண்ணாதீங்க. எப்பவுமே நல்ல விஷயத்தை பண்ணுங்க. நல்ல விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க, பேசுங்க. இந்த மாதிரி இன்னொருத்தரை தாழ்த்தணும்ன்னு சொல்லிட்டு தப்பான விஷயங்கள பரப்பாதீங்க.



நீங்க ட்விட்டர்ல போட்ட நிறைய விஷயத்துக்கு நான் ரியாக்ட் பண்ணல, அதனால இந்த மாதிரி போட்டு ரியாக்ட் பண்ண வைக்கலாம், அப்படின்னு நீங்க பண்றீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கே தெரியும் இதுக்கெல்லாம் அசர்ற ஆள் நான் கிடையாது. இது ஒரு Clarification வீடியோ, ஏன்னா கமல் சாரை நான் ரொம்ப மதிக்குறேன். என்னோட அப்பா மாதிரி அவரு. தேவையில்லாம இந்த மாதிரி வதந்தி கிளப்பாதீங்க நன்றி" என விளக்கம் கொடுத்து வீடியோவை அசிம் பகிர்ந்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Azeem clarify about his speech which mislead to Kamalhaasan

People looking for online information on Azeem, Bigg Boss 6, Kamal Haasan will find this news story useful.