தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி, மணிகண்ட ராஜேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ரச்சிதா வெளியேறினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன், ஷிவின், ஏடிகே, கதிரவன் உள்ளிட்ட 7 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். 90 நாட்களை கடந்துள்ள நிலையில் இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.
கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.
தற்போது, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமுதவாணன், அசீம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமுதவாணன் பேசும் போது, "நீதான்டா சொன்ன" என அமுதவாணன் அசீமை நோக்கி பேசுகிறார். உடனே அசீம், "திருப்பி டா சொல்லாதடா. சொல்லாத டா திருப்பி டா னு. நீ இப்ப டா சொன்ன. டா சொல்லாத" என அசீம் அமுதவாணனை நோக்கி பேசுகிறார். இதற்கு அமுதவாணன், "சாரி, தெரியாமல் வந்துருச்சு." என்கிறார். உடனே கோபமடைந்த அசீம், "தெரியாமல் வந்துச்சு வெங்காயம் வந்துச்சுனு. டா சொல்லாதனா சொல்லாத. டா சொல்லாதடா" என கை நீட்டி பேசுகிறார். உடனே அமுதவாணன், "விரலை மடக்கு. சொல்ல சொல்ல நீ தான் டா என்கிற" என பேசுகிறார். இச்சூழலில் விக்ரமன் வந்து பேச, அசீம் அவரிடம், "இவ்வளவு நியாயம் பேசுறீங்களே விக்ரமன், அவர் டா சொன்னதை கேட்க மாட்டீங்களா? நீங்க கேட்கமாட்டீங்க". என அசீம் பேசும் போது விக்ரமன், "கேட்டுட்டு தான் இருக்கேன்" என பதில் கூறுகிறார்.