"வந்ததும் திரும்ப ஆரம்பிக்காதீங்க, சரியா?".. முட்டிக்கொண்ட அசிம், மகேஸ்வரி.. "ஆஹா, இது அதுல்ல"!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நீ எப்படி இவ்ளோ தூரம் வந்தே, புரியவே இல்ல எனக்கு".. ஹவுஸ்மேட் மூஞ்சுக்கு நேரா எகிறிய அசிம்!!

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் Guest ஆக வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இதனிடையே தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் விஜே மகேஸ்வரி வருகை தந்துள்ளார். ஏறக்குறைய அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், ஏற்கனவே நடைபெற்று வரும் Sacrifice டாஸ்க்கின் புதிய வெர்ஷன் ஒன்றை அனைவரும் தயார் செய்கின்றனர். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு Sacrifice டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.

உதாரணத்திற்கு அசிம் பனியன் மற்றும் லுங்கி அணிந்து தான் வலம் வர வேண்டும் என்றும், கதிரவன் தன்னுடைய ஷூவை பெய்ண்டரில் முக்க வேண்டும் என்றும், அமுதவாணன் தனது தலை முழுவதும் பிரவுன் நிறத்தில் மாற்ற வேண்டுமென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு Sacrifice டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.

அப்படி ஒரு சூழலில் தற்போது Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் அந்த டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலந்து பேசி ஒரு Sacrifice டாஸ்க் தயார் செய்ய வேண்டும் என்றும் தெரிகிறது. அப்போது இதில் விக்ரமனுக்கு தாடியை ஒரு பக்கம் ஷேவ் செய்ய வேண்டும் என்றும் அசிமுக்கு புடவை அல்லது சுடிதார் அணிய வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் புடவை அல்லது சுடிதார் என்பதை தான் கீழே போவதாகவும் அசிம் குறிப்பிட, உடனடியாக பேசும் மகேஸ்வரி, "ஸாரி, சுடிதார் போட்டா கீழ போகணும்னு அர்த்தமில்லை" என தெரிவிக்கிறார். "நீங்க வந்த உடனே உங்க வேலைய ஆரம்பிக்காதீங்க சரியா?" என்று மகேஸ்வரியிடம் சொல்கிறார் அசிம். அப்போது மகேஸ்வரி ஏதோ கருத்துக்களைக் கூற, "அதனால் தான் நீங்க வெளியவும் போனீங்க, உட்காருங்க பேசாம" என தெரிவிக்கிறார்.

Also Read | "ஒண்ணாம் நம்பர் அராத்த காணல".. தனாவுக்கு ADK டெடிகேட் செய்த பாட்டு.. சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and VJ Maheshwari clash in bigg boss house for task

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, VJ Maheshwari will find this news story useful.