பொம்மை டாஸ்க் காரணமாக தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அரங்கேறி வருகிறது.
Also Read | தனலட்சுமிக்காக விக்ரமன்... ஷெரினாவுக்காக மகேஸ்வரி.. அனல் பறந்த வாதம்.. என்ன நடந்தது..?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
முன்னதாக முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, சொந்த முடிவு எடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.
அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. பொம்மை டாஸ்க்கிற்கு முன்பு வரை கூட சண்டை போட்டாலும் உடனடியாக ஒட்டி விடுவார்கள். ஆனால், இந்த டாஸ்க்கிற்கு பிறகு தொடர்ந்து சண்டை என வாரம் முழுக்க ஓயாமல் அரங்கேறி வருகிறது.
அதிலும், பொம்மை டாஸ்க்கில் அனைவரும் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டு விளையாட நடுவில் சிக்கிய ஷெரினா, கீழே விழுந்து காயம் அடைகிறார். இதற்கு தனலட்சுமி தான் காரணம் என அசீம் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். மறுபக்கம் அவர் காரணம் இல்லை என்றும் விக்ரமன் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தனலட்சுமிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
இப்படி ஒரு சூழலில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ ஒன்றில் விக்ரமன் மற்றும் அசீம் குறித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. "டால் ஹவுசில் ஒரு இடம் மீதமிருக்கிறது, உங்கள் முடிவு என்ன?" என பிக்பாஸ் கேட்க, விளையாடுகிறோம் என் அசீம் சொல்வது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, போட்டியாளர்கள் வரிசையில் நிற்க, அசல் கையில் அசீம் பொம்மையும், அசீம் கையில் விக்ரமன் பொம்மையும் இருப்பது போல தெரிகிறது.
இதன் பின்னர் அசீம் மற்றும் அசலிடம் பேசும் பிக்பாஸ், "அறிவிப்பு வந்தும் நீங்கள் முடிவு எடுக்காததனால் விக்ரமனும் அசீமும் இந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்" என தெரிவிக்கிறார். இதனால், அடுத்து என்ன நடக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Also Read | "யாரோ என்ன தள்ளி விட்டாங்க, ஆனா".. தனலட்சுமி விவகாரத்தில் முதல்முறை உடைக்கும் ஷெரினா