"கிளம்பு காத்து வரட்டும்".. ஆக்ரோஷமான அசீம்.. "நாகரீகமா பேசுங்க".. விக்ரமன் பதிலடி.. திரும்பவுமா??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Azeem and Vikraman argument over egg issue in BiggBoss
Advertising
>
Advertising

Also Read | "என்னை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்ல".. மகேஷ்வரி vs அசீம்.. BiggBoss

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் புதிய சிக்கல் ஒன்று வந்திருக்கிறது. விக்ரமன் தான் மணிகண்டாவிடம் முட்டை கேட்டதாகவும் அவர் இல்லை என்று சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது, "நான் இல்லைன்னு சொன்னேனா?" என கேட்கும் மணி, விக்ரமன் அருகே அமர்ந்திருந்த மகேஷ்வரியிடம்," நீங்க ஏன் தலையை ஆட்டுறீங்க. எனக்கு கோபம் வந்துடும். விக்ரமன் கிட்ட பேசும்போது நீங்க ஏன் குறுக்க வரீங்க" என்கிறார்.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, மகேஷ்வரியின் எலிமினேஷன் பற்றி மணி பேசியிருக்கிறார். இதனிடையே மெண்டல் மாதிரி பேசாதீங்க என மகேஷ்வரி சொல்ல, "அதை வாபஸ் வாங்குங்க" என்கிறார் விக்ரமன். இந்த சூழ்நிலையில் அங்கிருந்த அசீம் மகேஷ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது, அவரை சமாதானப்படுத்த விக்ரமன் முயல்கிறார். கோபமாக பேசிக்கொண்டிருந்த அசீம்," அவங்களை எதும் கேக்க மாட்டேங்குறீங்க. என்ன பேசாதீங்க-ன்னு சொல்றீங்க" என விக்ரமனிடம் அசீம் சொல்கிறார்.

தொடர்ந்து பேசும் , விக்ரமன் "அவங்க பேசுனத வாபஸ் வாங்குங்கன்னு தானே சொல்லிட்டு இருக்கேன்" என்கிறார். அப்போது, அங்குவரும் மணிகண்டா விக்ரமனிடம் பேச இடைமறிக்கும் அசீம்,"நீ பெண்ணா இருந்தா உனக்கு சப்போர்ட் பண்ணிருப்பாரு. அவங்க ஃப்ரண்ட் மகேஷ்வரி அதுனால உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாரு" என்கிறார்.

இதனால் விக்ரமன் - அசீம் இடையே வாக்குவாதம் வலுக்கிறது. ஒருகட்டத்தில் அசீம்,"இனிமே நீங்க நடுநிலையா பேசுறேன்னு சொல்லாதீங்க. கிளம்பு, கிளம்பு காத்து வரட்டும்" என சொல்லியபடி அங்கிருந்து செல்கிறார். இதனை கேட்ட விக்ரமன்,"நாகரீகமா பேசுங்க அசீம்" என எச்சரிக்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பரபரப்புடன் காணப்படுகின்றனர்.

Also Read | விக்ரமனிடம் சீரியஸா பேசிய அமுது.. சைலண்டா மகேஷ்வரி சொன்ன கமெண்ட்..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and Vikraman argument over egg issue in BiggBoss

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Maheshwari, Manikanta, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.