தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.
![Azeem and robert master clash in bigg boss amid new task Azeem and robert master clash in bigg boss amid new task](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/azeem-and-robert-master-clash-in-bigg-boss-amid-new-task-new-home-mob-index.jpg)
Also Read | தலைவன் GP முத்துவுக்கே Counter கொடுத்த விக்ரமன்.. மனுஷன் ஃபுல் Fun மோடுல இருக்காப்ல!!
முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில், Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.
இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக மாற்ற நிறைய ஜாலியான விளையாட்டையும் பிக் பாஸ் அறிவித்து வருகிறார். இப்படியாக இந்த வாரம் முழுவதும் அட்டகாசமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நகர்ந்த வண்ணம் உள்ளது. அதே போல, அனைத்து போட்டியாளரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்தும் வருகின்றனர்.
இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுறது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார்.
கடந்த 3 நாட்களாக அசிம் இதே கெட்அப்பில் வலம் வரும் நிலையில், இந்த டாஸ்க்கை நிறுத்துமாறும் தலை சீவ அனுமதிக்கும் படியும் தொடர்ந்து பிக் பாஸிடம் அறிவுறுத்தியும் வந்தார். ஆனாலும் தொடர்ந்து லுங்கி மற்றும் பனியனுடன் தான் பிக் பாஸ் வீட்டில் அவர் வலம் வந்த வண்ணம் இருக்கிறார்.
இதனிடையே, அசிம் தற்போது டாஸ்க்கை மீறி, யாருக்கும் தெரியாமல் மேக்கப் போட்டுக் கொண்டதாக போட்டியாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதாவது பாத்ரூமில் Foundation இருந்ததாக மைனா சக போட்டியாளர்கள் மத்தியில் தெரிவித்து, "இத யாரு பாத்ரூம்ல வெச்சா?" என்றும் கேட்கிறார். அப்போது அனைவரும் அசிம் யாருக்கும் தெரியாமல் பாத்ரூமில் மேக்கப் போட்டிருப்பார் என்றும் அவர் தான் Foundation-ஐ அங்கே வைத்திருப்பார் என்றும் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல், அசிம் மேக்கப் போடவில்லை என்பதை நிரூபிக்க Tissue கொண்டு முகத்தை துடைக்கவும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்போது ராபர்ட் மாஸ்டரும், அசிம் மேக்கப் போட்டதாக கூறுகிறார். இதனைக் கேட்டதும், "நான் ரச்சிதாவ கலாய்க்குறேன்ல, மாஸ்டரால தாங்கிக்க முடியல. உள்ள கபகபன்னு இருக்கு" என தெரிவிக்கிறார்.
இதனைக் கேட்டதும், ராபர்ட், அமுதவாணன் உள்ளிட்டோர் சற்று ஆவேசமாக ரச்சிதா பெயரை இழுக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கின்றனர். இது அடுத்தடுத்து விவாதங்களை உருவாக்க, "யாரு பிரச்சனைக்கும் போக மாட்டேன். வந்துச்சுன்னா உழுது விட்டுருவேன்" என்றும் அசிம் குறிப்பிடுகிறார். பிக் பாஸ் வீடு கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "சும்மா ஒண்ணும் வெளிய அனுப்பல!".. எலிமினேஷன் பற்றி மனம்திறந்த தனலட்சுமி