தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், கடந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.
இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற டாஸ்க்கின் இறுதியில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தர்கள். அதே போல, வார இறுதியும் வந்து விட்டதால் இந்த வார எலிமினேஷன் குறித்தும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்த வாரங்களில் சிறப்பாக டாஸ்க் ஆடுவது பற்றி அசீம் மற்றும் ராம் ஆகியோர் பேசுகின்றனர். முதலில் பேசும் ராம், "ஃபேமிலி ரவுண்டு வர்றது வரைக்கும் ஆவது இருக்கணும்" என குறிப்பிட தொடர்ந்து பேசும் அசீம், "நீ எல்லாம் இருப்பே ராம்" என்கிறார்.
இதனைத் தொடர்ந்து, "எனக்கு கான்ஃபிடெனஸ் இருக்கு. ஆனா அடுத்த 2, 3 வாரம் கொஞ்சம் நல்லா ஆடணும். ரொம்ப Crucial ஆன டைம். ஒழுங்கா கவனமா ஆடணும். டாஸ்க்ல எல்லாம் ஒழுங்கா அடிக்கணும். அதே மாதிரி நானும் சொல்றேன். Physical டாஸ்க் எல்லாம் வச்சாங்கன்னா நீ அமைதியா இருக்காத, Conveyor பெல்ட் மாதிரி" என ராம் அசீமிடம் சொன்னதும் அவரும் ஏதோ விளக்கம் கொடுக்க வர, தொடர்ந்து பேசும் ராம், "Violent ஆக ஆடணும்ன்னு சொல்லல. ஆனால், பலத்தை காமிக்க வேண்டிய இடத்தில் அதை காமிக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்துகிறார்.
"செஞ்சே ஆகணும் நான் நின்று இருந்தா அந்த டாஸ்க்ல (ஃபேக்டரி டாஸ்க்) பிரிச்சு மேஞ்சிருப்பேன். ஆனா, அப்படி ஆட நான் நினைக்கல. ஏன்னா, எல்லாரும் ரொம்ப வேதனைப்பட்டாங்க" என்கிறார் அசீம். "எல்லாருமே Physicalஆ ஆடும் போது நம்ம ஒருத்தவங்கள மட்டும் தப்பு சொல்ல கூடாதுல்ல. அந்த டாஸ்க்ல Beltல எல்லாருமே அடிதடி பண்ணாங்க, எல்லாருமே புடிச்சு இழுத்தாங்க" என ராம் கூறினார்.
இறுதியில் விளக்கும் அசீம், "ஏன் இப்படி பண்ணாங்க அப்படின்ற மாதிரி தோணுச்சு வேற ஒண்ணும் இல்ல. நான் அடிப்படையா ஸ்போர்ட்ஸ் Play வேணும்ன்னு ஒண்ணு சொல்லி இருப்பேன்ல, ஸ்போர்ட்ஸ் மேன் டா நானு. நான் இதெல்லாம் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். ஆனா எனக்குன்னு ஒரு இது நான் வச்சிருக்கேன்" என்கிறார்.
அடுத்தடுத்து வரும் டாஸ்குகள் மற்றும் நாட்கள், பிக்பாஸ் வீட்டில் மிக முக்கியமான ஒன்று என்ற அடிப்படையில் ஃபேக்டரி டாஸ்க் குறித்தும் அடுத்தடுத்த வாரங்களில் தங்களை தக்க வைப்பது குறித்தும் அசீம் மற்றும் ராம் பேசும் விஷயங்கள், பிக்பாஸ் பார்வையாளர்கள் கவனத்தையும் அதிகம் பெற்றுள்ளது.