"என்னை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்ல".. மகேஷ்வரி VS அசீம்.. BIGGBOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "ஒன்னும் கிழிக்க முடியல.. அதுனால அனுப்பிட்டாங்க".. மணிகண்டா vs மகேஷ்வரி.. biggboss

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் புதிய சிக்கல் ஒன்று வந்திருக்கிறது. விக்ரமன் தான் மணிகண்டாவிடம் முட்டை கேட்டதாகவும் அவர் இல்லை என்று சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது, "நான் இல்லைன்னு சொன்னேனா?" என கேட்கும் மணி, விக்ரமன் அருகே அமர்ந்திருந்த மகேஷ்வரியிடம்," நீங்க ஏன் தலையை ஆட்டுறீங்க. எனக்கு கோபம் வந்துடும். விக்ரமன் கிட்ட பேசும்போது நீங்க ஏன் குறுக்க வரீங்க" என்கிறார்.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, மகேஷ்வரியின் எலிமினேஷன் பற்றி மணி பேசியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் கண்கலங்கிய நிலையில் பேசும் மகேஷ்வரி,"இந்த வீட்ல எவிக்ஷன் ஆனவங்க பத்தி நான் பேசியிருக்கேனா? அந்த மேனர்ஸ் கூட இல்ல. இவங்க எல்லாம் என்ன காத்துக்கிட்டாங்கன்னு தெரியல" என்கிறார். அப்போது அருகே அமர்ந்திருந்த அசீம்,"மேனர்ஸ் பத்தி பேசுறதுக்கு ஒரு தகுதி வேணும். அது உங்களுக்கு கிடையாது" என அசீம் சொல்கிறார்.

இதனைக்கேட்ட அசீம்," எனக்கு தகுதி இல்லன்னு நீங்க சொன்னீங்கள்ல. இந்த நீலிக்கண்ணீர் எல்லாம் வேண்டாம். மேனர்ஸ் பத்தி பேச உங்களுக்கு தகுதி இல்ல" என்கிறார். இதனிடையே மகேஷ்வரி,"எவிக்ஷன் பத்தி பேசுறதை கேக்குறதுக்கு உங்களுக்கு தைரியம் இல்ல" என கூறுகிறார்.

அப்போது, "யாருக்கு தைரியம் இல்ல?" என கோபத்துடன் மணிகண்டா அங்கே வர சக போட்டியாளர்கள் அனைவரும் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்கின்றனர். இதனால் வீடே பரபரப்புடன் காணப்படுகிறது.

Also Read | விக்ரமனிடம் சீரியஸா பேசிய அமுது.. சைலண்டா மகேஷ்வரி சொன்ன கமெண்ட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and Maheshwari argument over egg issue in BiggBoss

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Maheshwari, Manikanta, Vijay Television, Vijay tv will find this news story useful.