BIGGBOSS 6 TAMIL : "அப்டி எல்லாம் பண்ண முடியாது".. அசீம் VS ஆயிஷா??.. வாக்குவாதத்தில் முடிந்த சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது அசீம் மற்றும் ஆயிஷா ஆகியோரிடையே வாக்குவாதம் நடந்தது தொடர்பான வீடியோ, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட், பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போதும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதனிடையே, முதல் வார இறுதியில் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் உரையாடி இருந்தார். இதில், பல சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி இருந்தது. தொடர்ந்து, புதிய போட்டியாளராக மைனா நந்தினியும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அதே போல, பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக டாஸ்க்கில் வெற்றி பெற்ற ஜிபி முத்து தேர்வாகி உள்ளார். அவரை போட்டியாளர்கள் பலரும் கொண்டாடியும் வருகின்றனர். இதற்கு மத்தியில் அசீம் மற்றும் ஆயிஷா ஆகியோரிடையே நடந்த வாக்குவாதம், இன்னும் விறுவிறுப்பை கூட்0டி உள்ளது.

பாத்திரம் சுத்தமாக இல்லை என்ற பெயரில் அசீமிடம் இது பற்றி கேட்கும் ஆயிஷா, அதனை சுத்தமாக வைக்கும்படியும் அவரிடம் அறிவுறுத்துகிறார். ஆனால், எப்போதும் பாத்திரம் கழுவிக் கொண்டே இருக்க முடியாது என்றும், கிடைக்கும் நேரத்தில் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வோம் என்றும் அசீம் தெரிவிக்கிறார்.

ஆனால், கடந்த வாரம் நாங்கள் பாத்திரம் கழுவும் அணியில் இருந்த போது எப்போதுமே பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தோம் என்றும் ஆயிஷா முறையிட நாங்கள் அப்படி 24 மணி நேரமும் பாத்திரம் கழுவிக் கொண்டே இருக்க முடியாது என அசீம் கூறுகிறார். இது கடும் விவாதத்தை உருவாக்க மற்ற போட்டியாளர்களும் உள்ளே வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இதற்கான காரணம் குறித்தும் மற்ற போட்டியாளர்களிடம் ஆயிஷா விளக்கவும் செய்கிறார். பாத்திரம் கழுவும் பெயரில் அசீம் மற்றும் ஆயிஷா ஆகியோர் இடையே நடந்த சம்பவங்கள், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and ayesha argued for vessel cleaning in biggboss 6 tamil

People looking for online information on Ayesha, Azeem, BB6 Tamil, BiggBoss6 Tamil will find this news story useful.