பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியினர் Vs ஏலியன்கள் டாஸ்க் தொடங்கியுள்ளது.
Also Read | “ரச்சிதா க்ரஷ்.. நான் என் girl friend-அ Love பண்றேன்.. பேச ஆரம்பிச்சிட்டேன்” .. ராபர்ட் EXCLUSIVE
இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர். இவர்களின் அணி அடுத்தடுத்த நாட்களில் இடம் மாறக்கூடும்.
இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.
அப்படி போகும் போது அந்த போட்டியாளர் பிடிபட்டால், அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து எதிரணியினர் தொடாமல் பேசியும் ரியாக்ஷன் பண்ணியும் டார்ச்சர் செய்வார்கள். பதிலுக்கு அந்த பிடிபட்டவர் ரியாக்ட் செய்தால் தோல்வி என அர்த்தம். அப்படியானால் என்ன பண்ண வேண்டும்? மாட்டிக்கொள்ளும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் மன திடகாத்திரத்துடன் எதிரணியினரின் டார்ச்சருக்கு ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை இருந்தால் அவர்களுக்கு, தேவைப்படும் பொருளுடன் வெற்றியுடன் வெளியே செல்லலாம்.
இதில் வீட்டிற்குள் ஏலியன்கள் இருக்கும் பகுதியில் பழங்குடியை சேர்ந்த கதிரவன் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் கதிரவன் கால்களை அமுதவாணனும் பிடித்துக் கொள்ள கதிரவன் கீழே விழ, அப்போது அமுதவாணனிடம் அசீம் வாக்குவாதம் செய்தார். பதிலுக்கு அமுதவாணன் அடிச்சு ஆடலாமா? என கேட்டுக்கொண்டே இருக்க, அப்போது அமுதுவிடம் அசீம், அவ்ளோ நெஞ்சு உரப்பு இருந்தா என்ன அடி என்கிறார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றிய பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் ஆளுக்கு ஒரு கருத்துக்களை சொல்லி வருகின்றனர். முன்னதாக விக்ரமன் பேசும் பொழுது, “அசீம் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு இதை எல்லாம் செய்கிறார்.. யாரும் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்கிற தைரியத்தால் இப்படி எல்லாம் செய்கிறார்” என்று குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து தனலட்சுமி பேசும் பொழுது கேப்டனுக்கும் கேம்முக்கும் என்ன சம்பந்தம் என்று வாதாட, எல்லாரும் சமம்தான் என்று விக்ரமன் தனலட்சுமியிடம் வாதிடுகிறார்.
இதேபோல் ஏடிகே பேசும் பொழுது இதை தவறு என்று விமர்சிக்கிறார். மைனா பேசும் பொழுது, “நீ எப்படி அசீம் அப்படி ஒரு கை வைக்கலாம்.. அந்த மாதிரி கழுத்தில் கை வைத்தால் என்ன அர்த்தம்? எதற்காக அப்படி கைவைத்தாய் சொல் நான் தெரிந்து கொள்கிறேன்” என்று மைனா கேட்கிறார். அசிமோ, “நான் கன்னத்தை திருப்புவதற்காகதான் கையை வைத்தேன். அடிப்பதற்காக அல்ல.” என்பது போல் விளக்கம் கொடுக்கிறார். அதற்கு இப்படித்தான் கையை வைப்பீர்களா என்பது போல் அவருடைய அணியினரே அவரை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த டாஸ்க் தொடங்கிய நாள் முதலிலேயே இருந்தே பழங்குடி அணிக்குள்ளேயே பிரச்சினைகளும் சண்டைகளும் போய்க் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | Dharavi Bank: வெப் சீரிஸ்க்காக தென்னிந்திய முன்னணி ஹீரோ படத்தை பார்த்த விவேக் ஓபராய்.!