தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Also Read | கேப்டன்சி TASK.. சூடுபிடிச்ச போட்டி.. கடைசி வரை Tough கொடுத்த அசீம்.. இந்த வார தலைவர் இவர்தான்.!
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது. சமீபத்தில் வார இறுதியில் தோன்றி இருந்த கமல் ஹாசன், அந்த வாரத்தில் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்து நிறைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில டாஸ்க்குகளும் இதற்கு மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, ரச்சிதாவும் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் அனைத்து போட்டியாளர்களும் அடுத்து உள்ளே யார் வருவார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. அப்போது வனிதா வருவதாக சிலர் குறிப்பிட அனைவரும் ஒரு நிமிடம் அரண்டு தான் போகின்றனர். மூன்றாவது பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்த வனிதா, மிகவும் ஆவேசமாகவும் யாராக இருந்தாலும் துணிச்சலாக நேராக பேசவும் கூடியவர்.
அப்படி இருக்கையில், வனிதா வீட்டிற்கு வருவார் என்பது பற்றி போட்டியாளர்கள் பேசிய வண்ணம் உள்ளனர். அப்போது பேசும் அசிம், "வனிதா அக்கக்காக தான் வெயிட்டிங். அவங்க பேசட்டும். நம்ம சூப்பரா கவுண்டர் குடுக்கலாம் அவங்களுக்கு" என சிரித்துக் கொண்டே தெரிவிக்கிறார். இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் ஷாக்கான அமுதவாணன், "நம்மளா?. ஏன் நம்மன்னு எங்கள சேர்க்குறே. Open-ஆ சொல்றேன்யா. அந்த அளவுக்கு எங்க நெஞ்சுல தைரியம் இல்லைய்யா. இன்னும் ரெண்டு வாரத்துக்கு அப்புறம் நாங்களே போய்டுவோம்யா" என ஜாலியாக தெரிவிக்க, "இவங்க வனிதா வனிதான்னு சொல்லி அந்தம்மாவ கடைசில இங்க எறக்க போறாங்க" என விக்ரமன் கூறுகிறார்.
இப்படியே வனிதா வருவது பற்றி ஒவ்வொரு போட்டியாளர்களும் பேசிக் கொண்டிருக்கும் விஷயம், பார்வையாளர்கள் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "வனிதா வந்தா நேரா அசிம்கிட்ட போய்".. ஜாலியா மைனா நந்தினி சொன்ன விஷயம் 😅.. ஹவுஸ்மேட்ஸ் கலகல