BIGG BOSS : “செருப்ப காட்டுன ஆயிஷா பொண்ணு .. நான் ஆண்’ங்குறதுனால எனக்கு ஜெயிலா?” - கொதித்த அசீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.

Advertising
>
Advertising

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.

இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் தற்போது ரேங்க் அடிப்படையில் போட்டியாளர்கள் நிற்க, அப்போது அசீம், ஆயிஷா உள்ளிட்டோர் மாறி மாறி பேசும் விஷயங்கள் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ரேங்கிற்காக ஒவ்வொரு எண்ணில் நின்று கொள்ள, அவர்களை பற்றி அசீம் பேசுகின்றார்.

இந்த Ranking Task-ல் சிறைக்கு போகக்கூடிய போட்டியாளரை நாமினேஷன் ஃப்ரீ ஸோனில் உள்ள மற்றவர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். இது குறித்த டாஸ்கில், போட்டியாளர் விக்ரமனை வேலை செய்யவில்லை என அசீம் சொன்னதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல், ஆயிஷாவுக்கு தகுதியே இல்லை என சொன்னதால், அசீமுக்கும் ஆயிஷாவுக்கும் வாக்குவாதம் நீடித்தது. அப்போது ஆயிஷாவை வாடி போடி என அசீம் பேசியதும், அசீமை நோக்கி அயிஷா செருப்பை எடுத்ததும் நடந்தது.

அப்போது பேசும் அசீம், "தகுதி இல்லாத பல பேர் இங்கே நிற்கிறார்கள். 1 st-ஆ இருக்கட்டும். 6 th-ஆ இருக்கட்டும். 9 th (ஆயிஷா) எல்லாம் சுத்தமாக தகுதி இல்லாத ஆள்" என கூறுகிறார். தான் சுத்தமாக தகுதி இல்லாத ஆள் என தன்னை குறிப்பிட்டதும் நேரடியாக அசீமிடம் கேள்வி கேட்டார் ஆயிஷா

"தகுதி இல்லை என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?" என ஆயிஷா கேட்க, "நீ தூக்கத்தை தவிர வேற என்ன பண்ணி இருக்கே?" என அசீம் திருப்பி கேட்கிறார். நீங்க மட்டும் தூங்கலயா? என ஆயிஷா மறுபடியும் கேட்டதும், "தேவை இல்லாம கத்தி பேசுற வேலைய என்கிட்டே வெச்சுக்காத ஆயிஷா" என அசீம் கூறியதும் மீண்டும் ஆயிஷா கத்திக் கொண்டிருக்க, "உனக்கு சவுண்டு இருக்குன்னா எனக்கும் தான்டி சவுண்டு இருக்கு. போடி" என அசீம் கடும் கோபம் அடைகிறார்.

வாடி, போடி என சொல்வதை பற்றி இன்னும் கோபத்துடன் ஆயிஷா கேட்பதுடன் செருப்பை கழற்றவும் முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்ததும் கோபத்தின் உச்சத்திற்கே செல்கிறார் அசீம். "அடிக்க சொல்றா அவள. நீ யார் செருப்பை கழற்ற. யாருடி நீ" என்றும் கேட்கிறார். இருவரையும் சமரசம் செய்ய சக போட்டியாளர்கள் முயற்சிகளும் மேற்கொள்கின்றனர். இதனிடையே, கோபத்துடன் பேசும் ஆயிஷா,"என் தகுதி என்னவென்று எனக்கு தெரியும். நீ ஒண்ணும் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல" என்றும் அசீமிடம் தெரிவிக்கிறார். இதனால், அசீம் இன்னும் கோபம் கொள்ள மாறி மாறி வார்த்தைகளையும் விடுகின்றனர். "யாரை கேட்டு ஷூ கழட்டுன?, அடி பாப்போம்" என்று அசீமும் பேசுகிறார்.

பின்னர் நாமினேஷன் ஃப்ரீ ஸோனில் இருந்த மைனா, ஷிவின் , மணிகண்ட ராஜேஷ், தனலட்சுமி, அமுதவாணன், ராபர்ட் உள்ளிட்டோரால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரையும் சிறைக்கான ரேங்க்கிங்கில் வைப்பதாக யோசிக்க, அப்போது அசீம், “இதுல நடுநிலையே இல்லையே?.. காரணமே இல்லாம இருக்கு. ஆயிஷா என்கிட்ட ஷூவ காட்டினத பத்தி பேசாம, நான் வாடி போடினு சொன்னத மட்டும் வெச்சு இப்படி பண்றீங்க.. நான் ஆண் அப்படிங்குறதுனாலயும், ஆயிஷா பெண் அப்படிங்குறதுனாலயும் இந்த சார்புநிலை முடிவா?” என கொந்தளித்தார்.

Azeem accusation gender partiality in ranking bigg boss 6 tamil

People looking for online information on Azeem Ayesha fight, Azeem Vs Ayesha, Azeem Vs Ayesha fight will find this news story useful.