ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். அப்படி ஒரு சூழலில் இந்த வாரம் நாமினேஷன் டாஸ்க்கிற்கு ஒரு புதிய முறையை பிக் பாஸ் கையாண்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள்.
ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி மக்களை எப்படி எல்லாம் சுவாரஸ்யப்படுத்தினார்கள் என்பது குறித்து பேச அதன் அடிப்படையில், ஒரு நபர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். சில விதிமுறைகளுடன் தங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டும் என பிக் பாஸ் குறிப்பிட, அனைத்து போட்டியாளர்களும் அதற்கேற்ப பேசிக் கொண்டே இருக்கின்றனர்.
அப்படி ஒரு சூழலில் ஷிவின் மற்றும் கதிரவன் லவ் டிராக் குறித்து அசிம் Confession ரூமில் பேசிய விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
இதில் பல டாஸ்க்குகள் குறித்து பேசி இருந்த அசிம், "திடீர்னு ஷிவினோட பொருள் ஏதாவது கதிரை எடுக்க சொல்லிட்டு அதை வச்சு விளையாடுறது. ஏதாவது பெருசா குழப்பம் வருதுன்னா அதோட முக்கியமான அடையாளமா நான் பல நேரம் திகழ்ந்து இருக்கேன்.
முக்கியமா அது ஷிவின், கதிருக்கு நடுவில் இருக்கிற அந்த Fun ஆன லவ் ட்ராக் அப்படிங்கிறத நாங்களே கொளுத்தி போட்டு விடுவோம். இங்க பாரு, கதிர் இப்படியெல்லாம் சொன்னான் அப்படின்னு ஷிவின்கிட்ட `சொல்லிட்டு நாங்களே ஒண்ண கொளுத்தி போட்டு விடுவோம். அது எல்லாமே நானும் மைனாவும் பேசி வச்சு பண்ணுவோம். ஷிவின புடிச்சு கலாய் கலாய்னு கலாய்ப்போம். கடைசில தான் உண்மையை சொல்லுவோம் " என அசிம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கதிரவனை இந்த பிக் பாஸ் வீட்டில் அதிகம் பிடிக்கும் என ஷிவின் குறிப்பிட்டிருந்த நிலையில், Freeze டாஸ்க்கின் போது கதிரவனின் தாய், தந்தை மற்றும் அவரது கேர்ள் ஃப்ரண்ட் ஆகியோர் வந்திருந்த போது ஷிவின் சற்று மனம் கலங்கவும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.