தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் அசிம் டைட்டில் வின்னராக தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், Behindwoods -ன் "மக்களுடன் அசிம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அப்போது அவருடன் பிக் வீட்டில் சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களான மணிகண்டா மற்றும் அசல் கோலார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் ஒரு இடத்தில் பேசி இருந்த அசிம், "Gang ஃபார்ம் பண்ணிட்டு கேங்குள்ள உக்காந்து இன்னொருத்தர பத்தி பேசுறது, இந்த கேங்க் மூலமா தான் ஃபினாலே போக முடியும் அப்படின்னு இல்லாம தனி ஒரு ஆளா விளையாடணும்ன்னு முடிவு பண்ணி இருந்தேன்.
கேம்ன்னு வந்தா தனியா விளையாடணும்ன்னு Sure Shot ஆ இருந்தேன். ஏன்னா, யார் கூடயும் நான் Gang இல்ல. தப்புன்னா தப்புன்னு சொல்லுவேன். உண்மையா இருக்கேன் அப்படிங்கிற பட்சத்துல எனக்கு தெரியும், 'நீங்க என்ன நாமினேட் பண்றா, கோடி பேர் மக்கள் இருக்காங்கடா என்னைக் காப்பாத்தன்னு'. அந்த நம்பிக்கைல தான் ஆடுனேன்" என தெரிவித்தார்.
Images are subject to © copyright to their respective owners
தொடர்ந்து அசிமிடம், நீங்கள் உள்ளே பேசியது நிறைய பேருக்கு வேதனையை உருவாக்கியதாக அவர்கள் ஃபீல் செய்வதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய அசல் கோலார், அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் சொன்ன அசிம், "எனக்கு தப்பு பண்றதுக்கு இருக்கிற தைரியம், அது தப்புன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேட்பதற்கான தைரியமும் இருக்கு. காழ்புணர்ச்சியான வார்த்தைகள் இல்லை, கெட்ட வார்த்தைகள் பேசல. ஆனா, கொஞ்சம் ஹார்சான வார்த்தைகள் எல்லாம் நான் பேசி இருக்கேன். வாடா, போடான்னு சொல்லி இருக்கேன். அதெல்லாம் தவறுதான். அது வந்து மனரீதியா கஷ்டப்படுத்தணும்னு சொன்னது இல்ல.
அந்த விவாதங்களோட சூட்டுல வந்து நாம என்ன பேசணும்னு தெரியாம் வர்றது. அப்போ கூட என் நாவை எப்படி கட்டுப்படுத்துனேன்னா இந்த கெட்ட வார்த்தை பேசாம, அவங்க குடும்பத்த பத்தியோ, இல்ல தனிநபர் பத்தி பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன். கோபப்பட்டது என் தப்பு தான். பல நேரங்களில் நான் உணர்ந்தேன். யார் யாரெல்லாம் என் கோபத்தால் கஷ்டப்பட்டாங்களோ அவங்க கிட்ட போய் மன்னிப்பும் கேட்டிருக்கேன். பொதுவாவும் கேட்டு இருக்கேன், திரு கமல்ஹாசன் முன்னிலையில் சனி, ஞாயிறு அன்னைக்கும் கேட்டிருக்கேன்" என அசிம் தெரிவித்தார்.