நவம்பர் 20, பிக்பாஸ்: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப் படுவதாக கமல் அறிவித்தார். அடுத்த வாரத்தில் ஷெரினா, நிவாஷினி, விஜே மகேஸ்வரி, ராபர்ட் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் தற்போது குயின்ஸி வெளியேறியுள்ளார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அசீம் தன் முன்னாள் மனைவியின் ஆடை குறித்து பேசிய பழைய பேச்சு இப்போது சர்ச்சையாகி வருகிறது. பிரபல சீரியல்களில் நடித்த நடிகர் அசீம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது தனது மகன் குறித்து பேசியுள்ளார்.
அப்படி முன்னதாக தனது முன்னாள் மனைவி குறித்து பேசிய அசீம், “ஒரு திருமண நிகழ்வுக்கு போனா கூட இப்படி மாடர்னா ட்ரெஸ் பண்ணனுமா?.. ஆனால், அவள் அப்படிதான் ட்ரெஸ் போடுவா? ஒரு நிகழ்ச்சிக்கு கூட நான் ஏன் ஸ்கர்ட் போட்டு வரக்கூடாதுனு கேட்பாள்.. அதை கேட்கப்போய் தான் எங்களுக்குள்ள முதல் சண்டையே வந்தது. முதல் முதலில் உண்டான வாக்குவாதமே அந்த ட்ரெஸ்காக தான்..’ என்று பேசியிருந்தார்.
தற்போது சமூக வலைதளத்தில் இது தொடர்பான வீடியோக்களும் பதிவுகளுமே பரவி வருகின்றன. அண்மையில் விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் சரியாக பேசுகிறார்கள்? இருவரில் யார் முற்போக்காளர்கள் என்கிற வாதம் நெட்டிசன்கள் மத்தியில் நடந்துவருகிறது. அந்த வகையில் அசீமின் இந்த ஆடை குறித்த பேச்சுக்கு விமர்சனமும் ஆதரவும் பெருகி வருகிறது.