LATEST: சூப்பர் அப்டேட்!!! ஐயப்பனும் கோஷியும் ரீமேக் #PSPKRANA எப்போ ரிலிஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் உருவாகி வருகிறது. 

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். நாகவம்சி தனது சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் அலுமினியம் தொழிற்சாலையில் நேற்று (26.07.2021) ஆரம்பமானது. இந்த படப்பிடிப்பில் பவன் கல்யானுடன், ராணாவும் கலந்து கொண்டார். 

இன்று (27.07.2021) இந்த படத்தின் உருவாக்க வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த வீடியோவில் இந்த படம் வருகிற ஜனவரி மாதம் மஹா சங்கராந்தியை முன்னிட்டு ரிலிசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

LATEST: சூப்பர் அப்டேட்!!! ஐயப்பனும் கோஷியும் ரீமேக் #PSPKRANA எப்போ ரிலிஸ் தெரியுமா? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ayyappanum koshiyum telugu remake release date announced

People looking for online information on Ayyappanum Koshiyum, Biju Menon, Pawan Kalyan, Prithiviraj, Rana Daggubati will find this news story useful.