LATEST: ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டில்க்கான தெறி மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் உருவாகி வருகிறது. ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமை பல மொழிகளில் விற்கப்பட்டது. அதில் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் நாக வம்சி கைப்பற்றினார்.

இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை நித்யா மேனனும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் அலுமினியம் தொழிற்சாலையில் 26.07.2021 அன்று ஆரம்பமானது. இந்த படப்பிடிப்பில் பவன் கல்யானுடன், ராணாவும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளிவந்துள்ளது. PSPKRana என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் பெயர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 9.45க்கு Glimpse வீடியோ மூலம் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

Ayyappanum koshiyum telugu remake movie pkrana update

People looking for online information on Ayyappanum Koshiyum, Pawan Kalyan, Rana Daggubati, Trivikram Srinivas will find this news story useful.