பிரபல நடிகர் குளிக்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்.. அதிர்ச்சியில் மூழ்கிய திரைத்துறை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மலையாள சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அனில் நெடுமாங்காட். இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார் அனில் நெடுமாங்காட். 

இந்நிலையில் அவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் ஷூட்டிங் இடைவேளையின் போது, அருகாமையில் உள்ள மலங்கரா அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக, அவர் ஆழத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனில் நெடுமாங்காட்டின் இந்த திடீர் மறைவு மலையாள திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் அனில் நெடுமாங்காட் காலமானார் | ayyappanum koshiyum Actor anil nedumangad passed away

People looking for online information on Anil Nedumangad, Ayyappanum Koshiyum will find this news story useful.