பிரபல சீரியல் நடிகை கடலுக்கு அடியில் சென்று போட்டோஷூட் நடத்திய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சியில் ஆங்கராக பார்வையாளர்களை கவர்ந்து பிரபலமானவர் சரண்யா. இதையடுத்து இவர் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் தனது காதலரான ராஹுலுடன் இணைந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சரண்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் கடலுக்கு அடியில் சென்று இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்களாம். மேலும் அவர், இந்த போட்டோஷுட்டின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.