"என்ன உங்க பிரச்சனை?..".. 'அந்நியன்' விக்ரமன் VS 'மன்மதன்' ஆயிஷா BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல சொகுசு கப்பலில் நடிகை கௌரி கிஷன்.. அவரே வெளியிட்ட டூர் வீடியோ!

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

இதில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் கூட நிறைய கலவரங்கள் வெடித்திருந்தது.

அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டது, பழங்குடி அணிக்குள்ளேயே உருவான சண்டை சச்சரவுகள், இரவில் பூ திருடியதாக அசீம் மீது எழுந்த குற்றச்சாட்டு என ஏராளமான விஷயங்கள் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. அதே போல, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விளையாடும் விதம் குறித்தும் நிறைய கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக, போட்டியாளர்கள் மத்தியில் நிறைய கருத்துக்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் அரங்கேறி வரும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து குறைவான சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.

இதில், நடிகர் விக்ரமின் அந்நியன் கெட் அப்பில் விக்ரமன் இருக்க, நடிகர் சிம்புவின் மன்மதன் கெட் அப்பில் ஆயிஷாவும் இருக்கிறார். இந்த நிலையில், சிம்பு போல விக்ரமனிடம் ஆயிஷா பேசும் விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

விக்ரமன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, குறுக்கே பேசும் ஆயிஷா சிம்புவின் ஸ்டைலில், "ஏங்க, நானும் ஆடுறேன்ங்க, நானும் ஏதாவது பண்ண விடுங்க. எத பண்ணாலும் அத பண்ணாத, இத பண்ணாதன்னு. என்ன உங்க பிரச்சனை?. விடுங்க என்ன. ஏற்கனவே பெருசா நடிப்பு வராது. யாரும் சொல்லி குடுக்கல. அப்படி சுத்திட்டு இருக்கேன்னு நானும் ஏதாவது பண்ணனும்லங்க. கொஞ்சம் விடுங்களேன். அத பண்ணாதீங்க, இத பண்ணாதீங்கன்னு சொல்லாதீங்க" என விக்ரமனிடம் கூறிய படி கடந்து செல்கிறார் ஆயிஷா.

இந்த வார நாமினேஷன் பட்டியலில் ஆயிஷா இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல கோயிலில் குழந்தைக்கும் கணவருக்கும் மொட்டை.. நடிகை பிரணிதா வெளியிட்ட போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Aysha and vikraman convo inside bigg boss house

People looking for online information on Aysha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.