ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கிளப் ஹவுஸ் டாஸ்க் முடிவுக்கு வந்ததை அடுத்து ஜனனியின் கிளப் சிறந்த கிளப்பாக அனைவரின் ரெட்டிங்காலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது பேசிய ஜனனி, “எங்க டீம்ல யாரு சூனியம் வெச்சாங்கனு தெரியல. உங்க பேரு என்ன?” என தனலட்சுமியை பார்த்து கேட்க, மற்றவர்கள் தனலட்சுமி என்று குறிப்பிடுகின்றனர். அப்போது ஜனனி, ஜிபி முத்து விகாரம் குறித்து தனலட்சுமி தரப்பு கருத்தை கேட்கிறார்.
முன்னதாக தனலட்சுமி ஜிபி முத்து குறித்து பேசும்போது, அவர் தான் பார்த்ததை முறைத்ததாக சொன்னார், கோபத்தில் நீ, வா, என ஒருமையில் பேசும்போது எனக்கு அவமானமாக இருந்தது என கூறியதுடன், முன்பு அனைவரும் அமர்ந்திருக்கும்போது ஜாலியாக பேசினோம். அதையெல்லாம் நான் பிரச்சனையாக முன்வைக்கவில்லையே? என தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய ஜனனி, “ஜிபி முத்து எகிறிக் கொண்டு வந்ததாக நீ கூறுகிறாய். ஆனால், நீ திருப்பி பேசிய விதம் தவறு. வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நான் உன்னிடம் கூறிய போது, நீ பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என குறிப்பிட்டாய். ஆனால், பிக்பாஸ் வீடு என்றால் அம்மா, அப்பா, அக்கா என இது ஒரு வீடு மாதிரி. இங்கே நீ அனைவரையும் வயதுக்கு ஏற்ற மாதிரி பார்க்க வேண்டும். அனைவரையும் ஒரே வயதில் இருக்க இது ஒன்றும் ரீல்ஸ் கிடையாது. அவருடைய வயதுக்கு அவர் எகிறினார் என்றால் அவர் எங்களுக்கு அப்பா மாதிரி தான். அவரே ஒரு இடத்தில் கோபப்பட்டால் கூட, நீ பொறுமையாக போயிருக்க வேண்டும்.
உன்னை விட வயது குறைவான நான் தலைவராக இருந்து ஒரு வேலையை உன்னிடம் சொல்லும் போது, நீ வயதில் குறைந்த என்னை எதிர்த்து பேசவும் வாய்ப்புண்டு. நீ நடந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை” என கூறினார். இதனை தொடர்ந்து தனலட்சுமி அழுதபடி வெளியே சென்றுவிட்டார். அங்கும் அமர்ந்து அழ தொடங்கினார். அப்போது, ஆயிஷா ஜிபி முத்து மற்றும் ஜனனியிடம், “அவ சாதாரணமா சொன்னா.. இதுல வயசு என்பதெல்லாம் ஒன்னுமே இல்லை.. ரீல்ஸ் என்று சொன்னதும் அவள் கஷ்டப்படுகிறாள். இதை ஏன் பிரச்சனையாக்குறீங்க? என கேட்க, அதற்கு ஜிபி முத்துவோ, ‘ஒரு பக்கமா பேசாதீங்க .. நான் கோவத்துல நீ வா போனு சொன்னேன்.. உங்களுக்கு தெரியாதா என்ன நடந்ததுனு .. நீங்க பாத்தீங்கல்ல..’ என கேட்க, “எனக்கு நியாபகம் இல்ல” என கைவிரித்த ஆயிஷா, பின்னர் வெளியே சென்று தனலட்சுமியிடம் பேசினார்.
அங்கு தனியாக அழுதுகொண்டிருந்த தனலட்சுமியிடம் ஆயிஷா, “ஜிபி முத்து மற்ற நேரங்களில் நீங்க,, வாங்க போங்க என்றுதானே பேசுனாரு?.. ” என கேட்க, தனலட்சுமி ஆமாம் என்கிறார். அப்போது ஆயிஷா, “அப்போ வா.. உனக்காக தான் நான் அவங்களோட வாதிட்டுகிட்டு இருக்கேன், நீ இங்க வந்து உக்காந்திருக்க.. வா” என அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் ஜனனியிடம், ஆயிஷா, விக்ரமன் மற்றும் தனலட்சுமி மூவரும் சென்றனர். தொடர்ந்து விக்ரமும் ஆயிஷாவும் ஜனனியிடம் ஜிபி முத்து & தனலட்சுமி விவகாரத்தில் தனலட்சுமி பக்கம் இருக்கும் நியாயத்தை பேசினர்.