BIGG BOSS 6 TAMIL : "எங்கிட்ட சத்தமா கதைக்காதீங்க".. தனலெட்சுமி விஷயத்தில் ஆயிஷா - ஜனனி இடையே உரசல்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

ayesha and janany argument gp muthu dhanalakshmi issue
Advertising
>
Advertising

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக பிக்பாஸ் வீட்டுக்குள் ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும்  கலகலப்பாக இருந்தார்.

இதில் தனலட்சுமி  தன்னை நடிப்பதாக சொன்னதாக சொல்லி விட்டதாக ஜிபி முத்து அழக்கூடிய ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் விரிவாக என்ன நடந்தது என்பதை எபிசோடில் விளக்கமாக காண முடியும். அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் ஆயிஷா மற்றும் தனலட்சுமி இருவரும் ஒத்த கருத்துடன் ஒரு புகாரை முன்வைத்தனர். அப்போது ஆயிஷா, ஜிபி முத்து மீது ஒரு புகாரை முன்வைக்கிறார். அதாவது ஜிபி முத்து மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்வதாக குறிப்பிடுகிறார். இதை ஜனனி டீல் செய்கிறார். இப்படி மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்தால் ஜிபி முத்து வெளியே சென்று படுக்க வேண்டும் என்று ஜனனி குறிப்பிடுகிறார்.

அப்போது ஆவேசமாகும்,  ஜிபி முத்து, “ஏன்.. எதுக்கு? நான் என்னுடைய வேலைகளை பார்த்து முடித்த பின்புதான் மற்ற அணிகளுக்கு வேலை செய்கிறேன். என்னால் அப்படித்தான் இருக்க முடியும். என் வேலைகளை மட்டும் என்னால் செய்து கொண்டிருக்க முடியாது. என் வேலைகள் முடியாமல் அப்படியே கிடந்தால், அதாவது என்னுடைய கடமையை நான் செய்யாமல் இருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்படி நான் என் கடமையில் இருந்து தவறிட்டேன்னு சொல்லுங்க.. நான் வெளிய போக தயார்.. எங்க வேணாலும் போய் படுத்துக்கிறேன்” என ஜிபி முத்து ஆவேசமாக பெட்ரூமை விட்டு வெளியே படுக்க தயார் என பேசினார்.

இதை அடுத்து பேசிய ஆயிஷா, “அவ்வாறு செய்தால் நீங்கள் எலிமினேட் ஆகிவிடுவீர்கள்” என சொல்கிறார். ஆனாலும் ஜிபி முத்து வெளியேறிவிடுவேன் என சொன்னது குறித்து தனலட்சுமி, “அதெப்படி நீங்கள் அணியை விட்டு வெளியேறி விடுவேன் என சொல்லலாம்?” என ஆவேசமாகி கேட்க, ஜிபி முத்துவோ, தான் அவ்வாறு சொல்லவில்லை என வாதிடுகிறார். பின்னர் ஆயிஷா மற்றும்  தனலட்சுமியிடம்தான் பேசும்போது அவர்கள் முறைப்பது போல் பார்த்ததாக ஜிபி முத்து கூற, ஒரு கட்டத்தில் தனலட்சுமியோ ஜிபி முத்து தன்னை ஒருமையில், ஆவேசமாக மரியாதை இல்லாமல் பேசுவதாக புகார் வைத்ததுடன், ஜிபி முத்துவை பார்த்து, “நடிக்காதீங்க?” என கூறிவிட்டார்.

அப்போதுதான் ஜிபி முத்து, “நான் நடிக்கிறேனா” என எமோஷனல் ஆகிறார். மற்றவர்கள் அவரை அப்போது பிடித்துக்கொள்ள, அவர்களின் பிடியில் இருந்து விலகி தனலட்சுமியிடம் சென்று, “எம்மா நீ என் பொண்ணு மாதிரி.. நீ எப்படி என்ன நடிக்கிறேன்னு சொல்ற? நான் உங்கிட்ட என்ன மரியாதை கொடுக்கல.. உன் கால்ல விழுந்து சொல்லணூமா?” என பேசுகிறார். இதனை தொடர்ந்து தனியே சென்று டைனிங் டேபிளில் ஜிபி முத்து கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட அழைத்தும், அவர் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார்.

பிறகு ஜிபி முத்துவிடம் பேசிய ஜனனி, அவருடைய மனநிலையை கேட்டறிந்தர். இந்நிலையில், தற்போது அனைவர் முன்னிலையிலும் தனலட்சுமியிடம் பேசிய ஜனனி, "ஜிபி முத்து எகிறிக் கொண்டு வந்ததாக நீ கூறுகிறாய். ஆனால், நீ திருப்பி பேசிய விதம் தவறு. வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நான் உன்னிடம் கூறிய போது, நீ பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என குறிப்பிட்டாய். ஆனால், பிக்பாஸ் வீடு என்றால் அம்மா, அப்பா, அக்கா என இது ஒரு வீடு மாதிரி. இங்கே நீ அனைவரையும் வயதுக்கு ஏற்ற மாதிரி பார்க்க வேண்டும். அனைவரையும் ஒரே நிலையில் எடுத்துக் கொள்ள இது ஒன்றும் ரீல்ஸ் கிடையாது. அவருடைய வயதுக்கு அவர் எகிறினார் என்றால் அவர் எங்களுக்கு அப்பா மாதிரி தான். அவரே ஒரு இடத்தில் கோபப்பட்டால் கூட, நீ பொறுமையாக போயிருக்க வேண்டும்.

உன்னை விட வயது குறைவான நான் தலைவராக இருந்து ஒரு வேலையை உன்னிடம் சொல்லும் போது எதிர்த்து பேசவும் வாய்ப்புண்டு. நீ நடந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை" என கூறினார். உடனே அங்கிருந்து எழுந்து சென்ற தனலட்சுமி, "பிக்பாஸ் வீட்டில் வராமலே இருந்திருப்பேன்" என குறிப்பிட்டு அழவும் ஆரம்பித்து விட்டார்.

தனியாக அழுதுகொண்டிருந்த தனலட்சுமியிடம் ஆயிஷா, “ஜிபி முத்து மற்ற நேரங்களில் நீங்க,, வாங்க போங்க என்றுதானே பேசுனாரு?.. ” என கேட்க, தனலட்சுமி ஆமாம் என்கிறார். அப்போது ஆயிஷா, “அப்போ வா.. உனக்காக தான் நான் அவங்களோட வாதிட்டுகிட்டு இருக்கேன், நீ இங்க வந்து உக்காந்திருக்க.. வா” என அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் ஜனனியிடம், ஆயிஷா, விக்ரமன் மற்றும் தனலட்சுமி மூவரும் சென்றனர். தொடர்ந்து விக்ரமும் ஆயிஷாவும் ஜனனியிடம் ஜிபி முத்து & தனலட்சுமி விவகாரத்தில் தனலட்சுமி பக்கம் இருக்கும் நியாயத்தை பேசினர்.

அப்போது ஆயிஷா ஜனனியிடம் எடுத்துச் சொல்ல முற்பட்டார், அப்போது ஆயிஷாவிடம் ஜனனி, “நான் பேசியது தப்பாக தெரியல.. நீ இது தொடர்பா வைக்குற கருத்து சரியில்ல .. நீதான் உன்னோட இந்த கருத்தை தனலட்சுமிக்குள்ள உருவாக்குற.. “ என சொல்லிக் கொண்டிருந்தபோது, ஆயிஷா, “ஏய். இது அவ சொன்னது .. தனலட்சுமி என்ன சொன்னாளோ அதைத்தான் நான் சொல்லிட்டு இருக்கேன். ஜிபி முத்து கோவமா நீ, வா, போ என ஒருமையில் பேசும்போது அவளுக்கு கஷ்டமா இருந்துருக்கு.. அதை அவர் வயசு அது இதுனு சொல்றதும், நீ ரீல்ஸ்னு சொல்றதும் தப்புனு அவ ஃபீல் பண்றா.. ரீல்ஸ் பண்ணிட்டு வந்தவங்க அவங்க.. அந்த விஷயத்தை வைத்து அட்வைஸ் பண்ணும்போது அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்” என்று கூறினார். 

அப்போது, ஜனனி “எங்கிட்ட இந்த மாதிரி சத்தமா கதைக்காத... தன்மையா கதை..” என கூறுவதுடன், மீண்டும் ஜனனி, “ரீல்ஸ் எல்லாரும்தான் பண்றோம். அவளை நான் அந்த அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை” என்று குறிப்பிட்டார். இப்படி தனலட்சுமி விஷயத்தில் ஆயிஷாவுக்கு ஜனனிக்கும் ஒரு சிறு உரசல் உண்டாகியுள்ளது. இது எதுவரை போகும் என தெரியவில்லை.

தொடர்புடைய இணைப்புகள்

Ayesha and janany argument gp muthu dhanalakshmi issue

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, GP MUTHU, Janany will find this news story useful.