பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் பெயரில் நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு அசத்தலாக விடை அளித்திருந்தார் கமல்ஹாசன்.
ஷெரினாவை தனலட்சுமி தான் கீழே தள்ளி விட்டார் என்ற விமர்சனம் இருந்தது. அசீம் உள்ளிட்ட பலரும் தனலட்சுமி தான் காரணம் என கைகாட்டி இருந்தனர். மறுபக்கம், விக்ரமன் உள்ளிட்ட சிலர் இது Accidental ஆக நடந்திருக்கலாம் என்றும் தனலட்சுமி மீது தவறில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
கடந்த வாரத்தில் இந்த விஷயம் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.
இதனிடையே, வார இறுதியில் வந்த கமல்ஹாசன், குறும்படம் போட்டு காட்டி ஷெரினா கீழே விழுந்ததற்கு தனலட்சுமி காரணமில்லை என்பதை உறுதி செய்தார். அந்த சமயத்தில் தனலட்சுமியை அனைவரும் கைதட்டி பாராட்டவும் செய்தனர். அதே போல, கடந்த வாரத்தில் அசீமின் செயல்பாடு குறித்தும் ஆவேசத்துடன் நேரடியாக அவரிடமே பேசி இருந்தார் கமல்ஹாசன். மேலும், குயின்சியின் தலைமை பண்பை கமல்ஹாசன் பாராட்டி இருந்ததும் சிறப்பசமாக பார்க்கப்பட்டிருந்தது.
இதனால், கமல்ஹாசன் வந்த முதல் நாள் எபிசோடு பெரிய அளவில் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில், ஆயிஷா பொம்மை டாஸ்க்கில் செய்தது தொடர்பாக கமல்ஹாசன் பேசி இருந்த விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
பொம்மை டாஸ்க் தொடர்பாக ஆயிஷாவிடம் கேள்வி கேட்கும் கமல்ஹாசன், "நீங்க ரச்சிதா பொம்மை எடுத்துட்டு டால் ஹவுஸ்க்கு போனீங்களா?" என்கிறார். இதற்கு ஆயிஷா பதில் சொல்லும் காட்சியில், "எனக்கு சத்தியமா தெரியாது. அந்த பொம்மையை தடுக்குறதுக்கு இவங்களுக்கு பிளான் இருந்துச்சுன்னு தெரியாது" என்று கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து ரச்சிதா பேசும் காட்சியில், "விளையாடணும்னு ஆசைப்படுற என் பொம்மை உள்ள வந்துருக்கலாமே" என்கிறார். இதனையடுத்து, ஆயிஷாவிடம் பேசும் கமல், "விளையாட விரும்பாத நீங்கள், ரச்சிதாவை எடுத்துட்டு போய்ட்டீங்க, அவர் எடுக்க சொன்னாருன்னு சொல்லிட்டு" என அசீமை கமல்ஹாசன் குறிப்பிடுவது போல தெரிகிறது.
இதன் பின்னர் பேசும் ஆயிஷா, "என்கிட்ட யாரும் சொல்லல, ரச்சிதா அக்கா பொம்மையை எடுத்துட்டு போறதுக்கு. அசீம் அண்ணா தான் நீ அத எடுத்துட்டு போய்க்கோன்னு சொன்னாங்க" என சொன்னதும், "அசீமுடைய திட்டத்தில் நீங்கள் பங்கு எடுத்துக் கொண்டீர்கள்" என கமல் கூறுகிறார். இதனைக் கேட்டதும் ஆயிஷா அதிர்ந்து நிற்பது போலான காட்சிகள் வருகிறது.