"MGR - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய்.. ஜெயம் ரவிக்கு போட்டி யாரு?".. செம்ம பதில் அளித்த ஜெயம் ரவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

Advertising
>
Advertising

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் முருகன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மார்ச் 10, 2023 அன்று  வெளியாகிறது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பல கேள்விகளுக்கு ஜெயம் ரவி மனம் திறந்த பதில்களையும் அளித்துள்ளார். குறிப்பாக, "சினிமாவில் Rivalry காலம்காலமாக இருப்பது. எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்று சொல்ற மாதிரி. ஒரு பக்கம் ஜெயம் ரவி என்று சொன்னால் இன்னொரு பக்கம் யார் பெயரை போடலாம்? போட்டி என்பது ஆரோக்கியமானது என்று கூட சொல்வாங்களே சார்" என்ற கேள்விக்கு "இப்படியே தனியா இருந்துட்டு போயிட்றேன். எனக்கு நான் தான் போட்டி. இப்படியே இருந்துட்டு போறேன்." என ஜெயம் ரவி பதில் அளித்துள்ளார்.

"MGR - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய்.. ஜெயம் ரவிக்கு போட்டி யாரு?".. செம்ம பதில் அளித்த ஜெயம் ரவி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ayam Ravi about His Rivalry in Kollywood Exclusive Interview

People looking for online information on Agilan, Ajith, Jayam Ravi, Kamal, MGR, Rajini, Sivaji, Vijay will find this news story useful.