2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனையை படைத்தது. இந்த படம் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், சுமார் 13 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான Avatar: The Way of Water (அவதார்: தி வே ஆஃப் வாட்டர்) திரைப்படம் உலகம் முழுவதும் அண்மையில் வெளியானது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | Oscars 2023 : ஆஸ்கார் மேடையில் ஆரவாரம் .. அசரவெச்ச RRR நாட்டு நாட்டு பாடல்..! வைரலாகும் வீடியோ
தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் என மொத்தம் 160 மொழிகளில் அவதார் படத்தின் 2-ஆம் பாகம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி, உலகம் முழுதுமான 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது.
ஐ மேக்ஸ்க்காக பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட அவதார் 2-ஆம் பாகம், டபுள் புரொஜக்ஷன் மெத்தேடில் திரையிடப்பட்டது. 3டி தொழில்நுட்பத்திலான அவதார் 2-ஆம் பாகம் எனும் உலகத்துக்குள் சென்று அதன் ஒரிஜினல் விஷுவல் எக்ஸ்பீரியன்ஸை தரிசனம் செய்யக்கூடிய அந்த டபுள் புரொஜக்ஷனுக்கு தகுந்த ஒரு 3டி ஃபைபர் கண்ணாடியை ஐ மேக்ஸ் பிரத்தியகமாக வழங்கியது.
Images are subject to © copyright to their respective owners.
அறிவியல் புனைகதை வரிசையிலான இந்த படத்தின் முதல் பாகத்தை எடுக்கவே அப்போதைய தொழில்நுட்ப தட்டுப்பாடுகளால் ஜேம்ஸ் கேமரூனுக்கு டைட்டானிக் தாண்டி, 10 வருடம் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் அவதார் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க தண்ணீரில் பயணிப்பதால், அதற்கான தொழில்நுட்பங்களான . UNDERWATER MOTION CAPTURE, தோற்ற மெய்ம்மை எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் இந்த படம் உருவாக்கப்பட்டு வெளியாகியிருந்தது.
Image Credit : BBC
இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது. இந்த 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் 4 பிரிவுகளில் அவதார் 2 -ஆம் பாகம் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஷூவல் எஃபெக்ட் பிரிவில் விருது வென்றுள்ளது இப்படம். ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அவதார் படத்தின் முதல் பாகம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read | சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்ற All Quiet on the Western Front படம் சொல்வது என்ன..?