ஆகஸ்ட் முதல் வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வாரம் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ZEE5, ஹாட்ஸ்டார், சோனி லிவ் போன்ற OTT இயங்குதளங்களில் பல திரைப்படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாக உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | ரன்பீர் கபூர் நடிக்கும் புதிய படம்.. படப்பிடிப்பில் இணைந்த பிரபல தென்னிந்திய நடிகை! வைரல் PHOTO

கடுவா

பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற கடுவா திரைப்படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கினார். பிருத்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்த கடுவா திரைப்படம் இப்போது OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. கடுவா படத்தை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ இன்று (ஆகஸ்ட் 4) முதல் ஒளிபரப்ப உள்ளது.

டார்லிங்ஸ்

டார்லிங்ஸ் படத்தில் ஆலியா பட் மற்றும் விஜய் வர்மா நடித்துள்ளனர். இந்த இந்தி டார்க் காமெடி திரைப்படம், திருமண தகராறு காரணமாக மாப்பிள்ளையை கடத்தும் மனைவி மற்றும்  மனைவியின் தாயை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. டார்லிங்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 5 முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

க்ராஷ் கோர்ஸ் (டிவி தொடர்) 

க்ராஷ் கோர்ஸ் எனும் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 5 முதல் Amazon Prime வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. விஜய் மௌரியா இயக்கத்தில் அனு கபூர், பானு உதய், உதித் அரோரா நடித்துள்ளார்கள்.

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்.. ஷூட்டிங் குறித்து வெளியான OFFICIAL அப்டேட்! முழு விவரம்

August First Week OTT Release Movies Web Series

People looking for online information on August First Week OTT Release Movies, OTT Release, Web Serires will find this news story useful.