VIDEO: நடிகர் தனுஷ் நடிக்கும் "கலாட்டா கல்யாணம்"! வெளியான வேறமாரியான கலர்ஃபுல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் இந்தியில் மீண்டும் நடித்துள்ள படம் அத்ரங்கி ரே. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டிற்கு கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ளது.

Atrangi Re Tamil Galatta Kalyanam Official Trailer Released
Advertising
>
Advertising

நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

Atrangi Re Tamil Galatta Kalyanam Official Trailer Released

ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தின் மூலம் நடிகர் தனுஷை 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகப்படுத்திய  இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை இயக்கியுள்ளார். மதுரை மற்றும் வட இந்திய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. 

Atrangi Re Tamil Galatta Kalyanam Official Trailer Released

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை A. R ரகுமான், இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர்கள் சாரா அலிகான், அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோர் தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். மோஷன் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட 24 மணி நேரம் கடந்த நிலையில், இந்த படத்தின் இந்தி - தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. 

VIDEO: நடிகர் தனுஷ் நடிக்கும் "கலாட்டா கல்யாணம்"! வெளியான வேறமாரியான கலர்ஃபுல் டிரெய்லர்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Atrangi Re Tamil Galatta Kalyanam Official Trailer Released

People looking for online information on A R Rahman, Akshay Kumar, Dhanush, Sara Ali Khan will find this news story useful.