இயக்குனர் அட்லி தளபதி விஜய் காம்போ என்றால் ரசிகர்களுக்கு குஷிதான். முதலில் தெறி அப்பறம் மெர்சல் என்று மாஸ் காட்டினார்கள்.
விஜய் பிறந்த நாளான இன்று (ஜூன் 22) தளபதிக்குப் பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்க, அட்லி தன் ட்விட்டரில் ஒரு அட்டகாசமான பதிவை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியது, ‘என்னோடா அண்ணா ... என்னோடா தளபதி .... என்னை விட அவரைத்தான் அதிகமாக நேசிக்கறேன், அவர் மேல நிறைய மரியாதை வைச்சிருக்கேன், அவருக்கு ரொம்ப கடன்பட்டிருக்கேன். நீங்க இல்லாம நான் ஒண்ணுமே இல்லண்ணா... லவ் யூண்ணா...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று மனதார வாழ்த்தியுள்ளார் அட்லி
அட்லி விஜய்யின் அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.