சென்னை: நடிகர் விஜய் - அட்லி சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

துபாய் அரசு மூலம் மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற நடிகை காஜல் அகர்வால்! முழு தகவல்!
தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் பிகில் படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.
இருப்பினும் அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு "Lion" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதே போல் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்குகிறார். ந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதே போல் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. நடிகர் விஜய், பூஜா ஹெக்டே தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துள்ளனர். பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அட்லி - விஜய் - லோகேஷ் கனகராஜ் - நெல்சன் திலீப்குமார் சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை விஜய் எடுத்ததாகவும் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். ஆனால் அதில் விஜய் இருக்கும் புகைப்படம் மட்டும் வெளியாக வில்லை.
நயன்தாரா இல்லாம தான் டூர் போனும் போல.. விக்னேஷ் சிவன் போட்ட வைரல் பதிவு!