தமிழ் சினிமாவில் சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி.
![Atlee shares picture with shah rukh khan and vijay Atlee shares picture with shah rukh khan and vijay](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/atlee-shares-picture-with-shah-rukh-khan-and-vijay-new-home-mob-index-1.jpg)
ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடித்திருந்த 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குனராக அட்லி அறிமுகமாகி இருந்தார்.
இந்த படம் பெரிய அளவில் ஹிட்டானதால், அட்லியின் பெயரும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து அசத்தலான இளம் இயக்குனர் என தன்னை ஒரு குறுகிய காலத்தில் முன்னிறுத்திக் கொண்டார் அட்லி. அது மட்டுமில்லாமல், நான்கு தமிழ் படங்களை இயக்கிய அதே வேகத்தில், அடுத்ததாக பாலிவுட்டில் அட்லி நுழைந்தார்.
நடிகர் ஷாருக்கான் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ஜவான்' என பெயரிடப்பட்டுள்ளது. ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியாமணியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதே போல, பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் ஜவான் படத்தில் இணைந்துள்ளதாக அவரே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் அட்லி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இயக்குனர் அட்லி, நேற்று (21.09.2022) தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இவருக்கு சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனிடையே, ஒரு பக்கம் நடிகர் ஷாருக்கான், மறுபக்கம் நடிகர் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அட்லி தற்போது பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது கேப்ஷனில், "எனது பிறந்தநாளில் இதை விட நான் என்ன கேட்டு விட முடியும். எனது சிறந்த பிறந்தநாள் இது தான். எனது தூண்களான ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணே, என்னோட தளபதியுடன்" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோர் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படம், ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.