வைரலாகும் பிரியா அட்லியின் PREGNANCY போட்டோ ஷூட்.. சமந்தா போட்ட வைரல் கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி.

Advertising
>
Advertising

Also Read | வாரிசு FDFS.. தாய்லாந்தில் இருந்து செனனை வந்து படம் பார்த்த கீர்த்தி சுரேஷ் 😍

  ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லிக்கு ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இயக்குனர் அட்லி, தனது காதல் மனைவி நடிகை பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.

இயக்குனர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

"சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு  இருக்கிறோம். " என அட்லி & பிரியா அட்லி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

இந்த போட்டோ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட கூடுதல் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த போட்டோ ஷூட்டை எடுத்த அம்ரிதாவின் பதிவில் நடிகை சமந்தா, "நம்ப முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் " என கமெண்ட் செய்துள்ளார்.

Also Read | "அஜித் சார் நீங்கள் தான் BEST".. 'துணிவு' படத்தின் வில்லன் வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Priya Pregnancy Photoshoot video Samantha Comment

People looking for online information on Atlee, Atlee Priya Pregnancy Photoshoot, Samantha, Samantha Comment will find this news story useful.