குழந்தை பிறப்புக்கு நயன்தாரா & விக்கியை தனது ஸ்டைலில் வாழ்த்திய அட்லி & காஜல் அகர்வால்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறப்பு குறித்த பதிவில் சினிமா பிரபலங்கள் &  ரசிகர்களின் கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Atlee Kajal Aggarwal wishes Nayanthara Vignesh Shivan
Advertising
>
Advertising

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்கு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

இன்று  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பியுள்ளனர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சில ரசிகர்களின் கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. சில ரசிகர்கள் டூடூ பாடலுடன் இரட்டை குழந்தைகளின் பிறப்பை ஒப்பிட்டு விக்னேஷ் சிவனை வாழ்த்தியுள்ளனர்.

நடிகை காஜல் அகர்வால், பெற்றோர் கிளப்புக்கு உங்களை வரவேற்கிறேன் என கூறியுள்ளார். இயக்குனர் அட்லி தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். நடிகர் கவினும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Kajal Aggarwal wishes Nayanthara Vignesh Shivan

People looking for online information on Atlee, Kajal Aggarawal, Nayanthara, Vignesh shivan will find this news story useful.