அட்லி - அர்ஜுன் தாஸ் கூட்டணியில் 'அந்தகாரம்' - ரசிகர்களின் லைக்ஸ் வாங்கிய பாடல் ஆல்பம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கியுள்ள அந்தகாரம் படத்தின் பாடல் ஆல்பம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லி. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது தனது A for Apple Productions தயாரிப்பில் அந்தகாரம் என்கிற படத்தை தயாரித்துள்ளார். 

விக்னராஜன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் தற்போது அந்தகாரம் படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் சிவம் எழுதியுள்ள இப்படத்தின் பாடல்களை, சியான் ரோல்டன், சக்திஶ்ரீ கோபாலன் உள்ளிட்ட பல்வேறு பாடகர்கள் பாடியுள்ளனர். இதையடுத்து இப்படத்தின் பாடல்களை கேட்ட ரசிகர்கள், ''வேற லெவல், செம, வாவ்' என கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 24-ஆம் தேதியன்று, இப்படம் வெளியாகவுள்ளது. 

 

அட்லி - அர்ஜுன் தாஸ் கூட்டணியில் 'அந்தகாரம்' - ரசிகர்களின் லைக்ஸ் வாங்கிய பாடல் ஆல்பம் வீடியோ

அந்தகாரம் படத்தின் ஆல்பம் | Atlee arjun das upcoming netflix film andhaghaaram music album

People looking for online information on Andhaghaaram, Andhaghaaram Audio, Arjun Das, Atlee, Vinoth Kishan will find this news story useful.