அரபிக் குத்து ரீல்ஸ் .. மனைவியுடன் சேர்ந்து அட்லீ ஆடும் செம்ம டான்ஸ்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய அட்லீ மற்றும் அவரது மனைவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெகா பட்ஜெட் படமாக உருவாக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிருத் இசையமைத்திருக்கும் 'அரபிக் குத்து' என்ற 'ஹலமிதி ஹபிபோ' பாடல் வெளியட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தை கலங்கடித்தது. அடுத்தடுத்த நாட்களில் உலகளவில் ஹிட் அடித்த இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட தொடங்கினர். திரை பிரபலங்கள் முதல், ரசிகர்கள் என எல்லோரும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி ராஜா ராணி ராஜா ராணி படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் பார்வையையும் தன் மீது திருப்பிய இயக்குனர் அட்லீ பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதில் அவருடன் சேர்ந்து அவரது மனைவி இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்களுடன் பிரபல கலை இயக்குனர் முத்துராஜும் ஆடியுள்ளார். தற்போது இவர்கள் நடனமாடிய இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக காதலர் தினத்தில் அட்லீயும், அவரது மனைவி பிரியாவும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யை வைத்து இவர் இயக்கிய தெறி திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தார். விஜய் - அட்லீ வெற்றி கூட்டணி  'மெர்சல்', பிகில் ஆகிய படங்களிலும் தொடர் வெற்றியை பதிவு செய்தனர். ரசிகர்கள் மத்தியிலும் இருவரின் வெற்றியை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Atlee and-priya cute dance of viral-video arabic-kuthu

People looking for online information on Arabic Kuthu, Atlee, Beast, Priya, Vijay, Viral Dance will find this news story useful.