அட்லி-மாஸ்டர் ஸ்டார் இணையும் படத்தின் வெறித்தனமான புதிய போஸ்டர் – ட்ரெயிலர் எப்ப தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் அட்லி. தொடர்ச்சியாக படங்களை இயக்கிவந்த இவர் தற்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

A for Apple Productions என்ற இவரது தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே ஜீவாவின் ’சங்கிலி புங்கிலி கதவத் தெற’ படத்தை தயாரித்துள்ளது. அடுத்ததாக அவர் தயாயாரிக்கும் படத்தில் கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கிறார்.

அந்தகாரம் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அந்தகாரம் என்றால் இருள் என்று பொருள்.

இதில் அர்ஜுன் தாசுடன் கீரிடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், 'ராஜா ராணி'யில் நயன்தாராவின் தோழியாக நடித்த மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை சுசி சித்தார்த் இயக்க, திரு அமுதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. 

Atlee and Master star Arjun Das's next Andhaghaaram trailer will be out tomorrow 5 PM | அட்லி அர்ஜுன் தாசை வைத்து தயாரிக்கும் அந்தகாரம் திரைப்படத்

People looking for online information on Andhaghaaram, Arjun Das, Atlee will find this news story useful.