'ரசிக்க கத்துக்கங்க'.. அதிரப்பள்ளியில் திடீர் விசிட் அடித்த சமந்தா.. எதுக்காக தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. க்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இரண்டு பெண்களை ஒரு இளைஞன் காதலிக்கிறார். யாரை கரம்பிடிக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு காமெடி கலந்த ரொமாண்டிக் படமாக இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

Advertising
>
Advertising

மேலும், தெலுங்கு திரையுலகில் 'சாகுந்தலம்',  'யசோதா' ஆகிய படங்களிலும் சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து 'தி ஃபேமிலிமேன்' தொடர் இயக்குனரின் அடுத்த வெப்தொடரிலும் ஹாலிவுட் வெப்தொடரிலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.  சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில், 'ஊ அண்டாவா' என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சமந்தா - நாக சைத்தன்யா ஜோடி, கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில்,  அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  மும்பையில் முடிவெட்ட சென்ற இடத்தில் அவர் அணிந்திருந்த பனியன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இல்லற வாழ்க்கை முறிந்த பிறகு சுற்றுலா செல்வது, சமூகவலைதளங்களில் நடிகை சமந்தா ஆக்டிவாக இருக்கிறார். என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 22 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம்பிடித்த அரப்பிக்குத்து பாடலுக்கு ரீல்ஸ் நடனம் ஆடியிருந்தார் சமந்தா. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சமந்தா விசிட் அடித்துள்ளார். அதில் ஒரு மலைக்குன்றின் மேல் நின்று சமந்தா தந்த போஸ்தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. சிகப்பு நிற உடையில் சமந்தா தந்த போஸுக்கு 18 லட்சம் லைக்ஸை தாண்டி ரசிகர்கள் சிதறவிட்டு வருகிறார்கள். இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக அவர் வாழ்க்கை தத்துவத்தையும் பதிவு செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் கமாண்ட் செய்து வருகின்றனர்.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Athirampalli falls at kerala visits samantha glamour images

People looking for online information on Athirapalli, Kerala, Samantha, Viral Photos, Water falls will find this news story useful.