Pramod Films பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள "ட்ரிகர்" படத்தின் செகண்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்.. ஷூட்டிங் குறித்து வெளியான OFFICIAL அப்டேட்! முழு விவரம்
சமீபத்தில் வெளியான "ட்ரிகர்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் அதர்வா முரளியின் 'ஆங்கிரி யங் மேன்' தோற்றம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் அதர்வா கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செகண்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
Romeo Pictures ராகுல் படத்தை தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2022 இல் வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
"ட்ரிகர்" இயக்குநர் சாம் ஆண்டன் எழுதி இயக்கியிருக்கும் ஒரு அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். , Pramod Films பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அருண்பாண்டியன், முனிஷ் காந்த், கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன் போன்ற பிரபல நடிகர்களுடன் மேலும் சில முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட இயக்குநர் P.S. மித்ரன் (இரும்புத்திரை, சர்தார் புகழ்) வசனம் எழுதுகிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
Also Read | ஆகஸ்ட் முதல் வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!