நேரடியாக OTT யில் வெளியாகும் அதர்வா நடிக்கும் புதிய படம்! எப்போ? எந்த OTTயில் ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக அதர்வா முரளி தெலுங்கில் ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் சாம் ஆண்டன் கடைசியாக யோகிபாபுவை வைத்து கூர்கா படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் நடிகர் அதர்வா முரளி கூட்டணி 100 திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மீண்டும் இணைந்தது. இந்த படத்திற்கு Trigger என பெயரிடப்பட்டது.  இப்படத்தை Pramod Films சார்பில் தயாரிப்பாளர் சுருதி நல்லாப்பா தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஆண்டனி ரூபன் கவனிக்கிறார், கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிசந்திரன் நடிக்கிறார். இவர் கருப்பன் படத்தில் நடித்தவர், தற்போது உதயநிதிஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் பாண்டியன் முக்கிய வேடத்தில் அதர்வாவின் தந்தையாக நடிக்கிறார். 

இந்த படத்தின் டிரெய்லர், போஸ்டர் என்று எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைமில் ஜனவரியில் வெளியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக பொங்கலுக்கு வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Atharva movie Trigger direct Premiere in Amazon prime in January

People looking for online information on Atharva, Sam Anton will find this news story useful.